மது சாலினி | |
---|---|
![]() Madhu Shalini watching CCL 2012 match | |
பிறப்பு | அசுமா பர்வீன் 21 சூலை 1983 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் |
பணி | நடிகை, தொகுப்பாளினி |
செயற்பாட்டுக் காலம் | 2005 – தற்போதுவரை |
மது சாலினி ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும் தொகுப்பாளினியும் ஆவார். குச்சிப்புடி நடனத்தை நன்கு கற்ற நடனக் கலைஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்பட நடிகையாவார்.
மது சாலினி பிறந்ததும் வளர்ந்ததும் ஹைதராபாத் நகரமாகும். இவரது தந்தை ஒரு தொழிலதிபர்; தாயார் ஒரு வழக்குரைஞர். தந்தை இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர், தாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.[1] தாயைப் போல குச்சிப்புடி நடனம் கற்ற இவர் முதலில் விளம்பரப் படங்களில் நடித்தார். தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக சிலகாலம் இருந்தார். பின் நடிகையாகத் தெலுங்குத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தார்.[2]
2005 ஆம் ஆண்டு முதல் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமாகி பரவலாகப் பேசப்பட்ட இவர் தொடர்ந்து பல தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.[1][2][3][3][4][4][5][5][6][7][8]
தெலுங்கில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து இவர், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பழனியப்பா கல்லூரி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் வெற்றிபெறவில்லை.[9] இவரது அடுத்த தமிழ்த் திரைப்படம் பதினாறு.[9] மிகவும் காலம் சென்று வெளியான இத்திரைப்படம் சுமாரான படமாக அமைந்தாலும் அதில் இவரது கதாபாத்திரமான இந்து, இவருக்கு நல்ல விமர்சனத்தைப் பெற்றுத் தந்தது.[10][11][12] பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் தன் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.[13]
பாலிவுட் திரையுலகில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட் என்ற இந்தித் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[14]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)