தெலங்காணா அரசு | |
---|---|
அமைவிடம் | எர்ரகடா, ஐதராபாத்து (இந்தியா), இந்தியா |
மருத்துவப்பணி | பொது |
வகை | சிறப்பு பிரிவு |
இணைப்புப் பல்கலைக்கழகம் | கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் |
அவசரப் பிரிவு | ஆம் |
படுக்கைகள் | 600 |
நிறுவல் | 1895 |
பட்டியல்கள் |
மனநல சுகாதார நிறுவனம், எர்ரகடா (Institute of Mental Health, Erragadda) என்பது எர்ரகடா மனநல மருத்துவமனை என்றும் அழைக்கப்படுவது ஐதராபாத்து மாநிலத்தில் நிசாம் ஆட்சியின் போது நிறுவப்பட்ட பழமையான சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும்.[1] இது ஐதராபாத்தில் உள்ள எர்ரகடாவில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தினை தெலங்காணா அரசு நடத்தி வருகின்றது. இது மாநிலம் முழுவதும் உள்ள மனநல நோயாளிகளுக்கு மருத்துவச் சேவை செய்கிறது.
மன தஞ்சம் என்று பொருள்படும் தாருல்-மஜனைன் என நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை, சஞ்சல்குடா மத்தியச் சிறையில் தொடங்கப்பட்டு 400 படுக்கைகளுடன் ஜல்னா (மகாராட்டிரா)க்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனம் 1895-1907-ல் ஜல்னாவிற்கு (அந்த நேரத்தில் நிசாம் ஆதிக்கத்தின் ஒரு பகுதி) மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் பெயர் தாருல்-மஜனைன் என்பதிலிருந்து மனநோய்களுக்கான மருத்துவமனை, ஜல்னா என மாற்றப்பட்டது.[2]
ஐதராபாத் மாநிலம் (1948-56) உருவாக்கப்பட்ட பின்னர், ஜல்னா மகாராட்டிராவுடன் இணைக்கப்பட்ட பிறகு, 1953-ல் இந்த நிறுவனம் ஜல்னாவிலிருந்து ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டது. மருத்துவர் ஆர். நடராஜன் கடைசியாக அரசு கண்காணிப்பாளராக இருந்தார்.[1]
2006ஆம் ஆண்டு தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்காக பிரத்தியேகமாக 150 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியுடன் இந்நிறுவனம் விரிவுபடுத்தப்பட்டது.[3]