அனைத்துலக குருதி மாற்றீட்டுக்கான சமூகம் (ISBT - International Society of Blood Transfusion) மனிதரில் 39 குருதி குழு முறைமைகள் (Blood Group Systems) இருப்பதாக அடையாளம் கண்டுள்ளது[1]. அவற்றில் முக்கியமானவையாக ஏபிஓ குருதி குழு முறைமையும், ஆர்எச் குருதி குழு முறைமையும் கருதப்படுகின்றன. இந்த ஏபிஓ, ஆர்எச் பிறபொருளெதிரியாக்கிகளைப் போன்ற வேறும் பல பிறபொருளெதிரியாக்கிகள் குருதிச் சிவப்பணுவின் மென்சவ்வின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. எடுத்துக் கட்டாக ஒரு குருதியானது ஏபிஓ, ஆர்எச் நேர் நிலையை (Rh positive) கொண்டிருக்கும் அதேவேளையில், MN நேர் (MNS system), K நேர் (Kell system), Lea or Leb நேர் (Lewis system) ஆகவும் இருக்கலாம். அனேகமான இந்த குழு முறைமைகளின் பெயர், முதன் முதலில் எந்த ஒரு நோயாளியில் குறிப்பிட்ட பிறபொருளெதிரி அறியப்பட்டதோ, அவரின் பெயரில் குறிப்பிடப்பட்டது.
அனைத்துலக குருதி மாற்றீட்டுக்கான சமூகத்தின் வரைவிலக்கணப்படி, குருதிக் குழு முறைமையானது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிறபொருளெதிரிகள், ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையில் (locus) அமைந்த எதிருருக்களாலோ, அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குறுக்குப் பரிமாற்றம் (crossover) மூலம் மீண்டிணைதல் (recombination) நிகழும் சாத்தியமற்ற, மிகவும் நெருக்கமான அமைந்த அமைப்பொத்த/ சம (homologous) மரபணுக்களாலோ கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கும்[2].
இந்த முறைமையில் குருதியானது A, B, AB, O என்னும் நான்கு முக்கியமான வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஆனாலும் குருதி மாற்றீட்டை சிக்கலாக்கும் தன்மை கொண்ட 200 க்கும் மேற்பட்ட வேறுபட்ட சிறிய வகைகள் இருப்பதாக அறியப்படுகின்றது. இவை அரிதான குருதி வகைகளாகக் கருதப்படுகின்றன. பொதுவாக இவை ஓரிரு எழுத்துக்களால் + அல்லது - குறியீட்டுடன் பெயரிடப்படும். ஆனாலும் சிலர் அதிக எழுத்துக்களால், விபரமாகக் குறிப்பிட்டு நீண்ட பெயர்களாகவும் அடையாளப்படுத்துவர்.
இந்த முறைமையில் குருதியானது ஆர்எச்-நேர் (Rh+), ஆர்எச்-எதிர் (Rh-) என்னும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஆர்எச்-நேர் என்பது குருதிச் சிவப்பணுக்களில் சில பிறபொருளெதிரியாக்கிகள் இருப்பதையும், ஆர்எச்-எதிர் என்பது அந்த பிறபொருளெதிரியாக்கிகள் இல்லாத நிலையையும் குறிக்கின்றது.
International Society of Blood Transfusion (ISBT) எண் | முறைமையின் பெயர் | முறைமையின் அடையாளம் | பிறபொருளெதிரித்தூண்டி (epitope) அல்லது காவி (carrier), குறிப்பு | நிறப்புரியின் எண் |
---|---|---|---|---|
001 | ஏபிஓ குருதி குழு முறைமை / ABO | ABO | Carbohydrate (N-Acetylgalactosamine, galactose). A, B and H antigens mainly elicit IgM antibody reactions, although anti-H is very rare, see the Hh antigen system (Bombay phenotype, ISBT #18). | 9 |
002 | MNS பிறபொருளெதிரியாக்கி முறைமை | MNS | GPA / GPB (glycophorins A and B). Main antigens M, N, S, s. | 4 |
003 | P பிறபொருளெதிரியாக்கி முறைமை | P1 | கிளைக்கோகொழுமியம். Antigen P1. | 22 |
004 | ஆர்எச் குருதி குழு முறைமை / Rh | RH | Protein. C, c, D, E, e antigens (there is no "d" antigen; lowercase "d" indicates the absence of D). | 1 |
005 | Lutheran பிறபொருளெதிரியாக்கி முறைமை | LU | Protein (member of the immunoglobulin superfamily). Set of 21 antigens. | 19 |
006 | Kell பிறபொருளெதிரியாக்கி முறைமை | KEL | Glycoprotein. K1 can cause hemolytic disease of the newborn (anti-Kell), which can be severe. | 7 |
007 | Lewis பிறபொருளெதிரியாக்கி முறைமை | LE | Carbohydrate (fucose residue). Main antigens Lea and Leb - associated with tissue ABH antigen secretion. | 19 |
008 | Duffy பிறபொருளெதிரியாக்கி முறைமை | FY | Protein (chemokine receptor). Main antigens Fya and Fyb. Individuals lacking Duffy antigens altogether are immune to malaria caused by Plasmodium vivax and Plasmodium knowlesi. | 1 |
009 | Kidd பிறபொருளெதிரியாக்கி முறைமை | dbMHC | Protein (urea transporter). Main antigens Jka and Jkb. | 18 |
010 | Diego பிறபொருளெதிரியாக்கி முறைமை | DI | Glycoprotein (band 3, AE 1, or anion exchange). Positive blood is found only among East Asians and Native Americans. | 17 |
011 | Yt பிறபொருளெதிரியாக்கி முறைமை | YT | Protein (AChE, acetylcholinesterase). | 7 |
012 | XG பிறபொருளெதிரியாக்கி முறைமை | XG | Glycoprotein. | X |
013 | Scianna பிறபொருளெதிரியாக்கி முறைமை | SC | Glycoprotein. | 1 |
014 | Dombrock பிறபொருளெதிரியாக்கி முறைமை | DO | Glycoprotein (fixed to cell membrane by GPI, or glycosyl-phosphatidyl-inositol). | 12 |
015 | Colton பிறபொருளெதிரியாக்கி முறைமை | CO | Aquaporin 1. Main antigens Co(a) and Co(b). | 7 |
016 | Landsteiner-Wiener பிறபொருளெதிரியாக்கி முறைமை | LW | Protein (member of the immunoglobulin superfamily). | 19 |
017 | Chido பிறபொருளெதிரியாக்கி முறைமை | CH/RG | C4A C4B (complement fractions). | 6 |
018 | Hh பிறபொருளெதிரியாக்கி முறைமை | H | Carbohydrate (fucose residue). | 19 |
019 | XK (புரதம்) / Kx | XK | Glycoprotein. | X |
020 | Gerbich பிறபொருளெதிரியாக்கி முறைமை | GE | GPC / GPD (Glycophorins C and D). | 2 |
021 | Cromer பிறபொருளெதிரியாக்கி முறைமை | CROM | Glycoprotein (DAF or CD55, regulates complement fractions C3 and C5, attached to the membrane by GPI). | 1 |
022 | Knops பிறபொருளெதிரியாக்கி முறைமை | KN | Glycoprotein (CR1 or CD35, immune complex receptor). | 1 |
023 | Indian பிறபொருளெதிரியாக்கி முறைமை | IN | Glycoprotein (CD44 adhesion function?). | 11 |
024 | OK பிறபொருளெதிரியாக்கி முறைமை / Ok | OK | Glycoprotein (CD147). | 19 |
025 | Raph பிறபொருளெதிரியாக்கி முறைமை | MER2 | Transmembrane glycoprotein. | 11 |
026 | JMH பிறபொருளெதிரியாக்கி முறைமை | JMH | Protein (fixed to cell membrane by GPI). | 6 |
027 | Ii பிறபொருளெதிரியாக்கி முறைமை | I | Branched (I) / unbranched (i) polysaccharide. | 6 |
028 | Globoside பிறபொருளெதிரியாக்கி முறைமை | GLOB | Glycolipid. Antigen P. | 3 |
029 | GIL பிறபொருளெதிரியாக்கி முறைமை | GIL | Aquaporin 3. | 9 |
030 | Rh- இணைந்த கிளைக்கோ புரதம் | RHAG | Rh-associated glycoprotein. | 6 |
{{cite web}}
: Unknown parameter |month=
ignored (|date=
suggested) (help)