இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
மனோகராஜாதகக் கதைகளில் ஒன்றான கின்னரி (பாதிப் பெண், பாதிப் பறவை) நாயகி. பொதுவாக மனோகரா மற்றும் இளவரசர் சுதனா எனக் குறிப்பிடப்படும் இது, [1] புராணக்கதை திவ்யவதனாவில் தோன்றுகிறது. போரோபுதூரில் உள்ள கல் படிவங்களில் ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளது. [2]
இந்த கதை மியான்மர், கம்போடியா, [3]தாய்லாந்து, லாவோஸ், இலங்கை, வடக்கு மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெற்றுள்ளது. [4][5] கிபி 1450-1470 இல் சியாங்மை எனும் பகுதியில் வசித்த புத்தத் துறவியால் பாலி க்ரந்ததில் எழுதப்பட்ட பன்னஸ்ஜாடகா என்னும் கதையில் சுதனா மற்றும் மனோகராவின் கதையையும் கூறியுள்ளது. [6] இளவரசியும் மாட்டுப்பண்ணையும் என்ற சீனக் கதை உட்பட, இதனையொத்த பல கதைகள் ஜப்பான், கொரியாவியட்நாம், மற்றும் சீனாவிலும் கூறப்பட்டுள்ளன. இந்தக் கதைகளின் படி, பறக்கக்கூடிய ஏழு பெண்கள் குளிப்பதற்குப் பூமிக்கு இறங்கினர். அவர்களில் இளையவர் மற்றும் அழகானவர் ஒரு மனிதனால் பிடிக்கப்பட்டார். பின்னர் ஓர் ஆண் மனிதனின்(சிறைபிடித்த ஆண் அல்லது கதாநாயகன்) மனைவியானார். பின்னர் கதைகளில், நாயகி சில மாயாஜாலத்தைப் பயன்படுத்திப் பறவையாக உருமாற்றம் செய்து பறந்து சென்றார். பறக்கும் மனைவியைத் தேடி நாயகன் தேடலைத் தொடரும் வகையில் இக்கதை அமைந்துள்ளது.
கிம்னாரா மன்னரின் ஏழு மகள்களில் இளையவரான மனோகரா, கையிலை மலையில் வசிக்கிறார். ஒரு நாள், அவர் மனிதர்கள் வசிக்கும் மண்டலத்திற்குச் செல்கிறார். அவர் ஒரு வேட்டைக்காரனால் பிடிக்கப்படுகிறார் (சில பதிப்புகளில் ஒரு மந்திரக் கயிற்றைப் பயன்படுத்தி) அவரை இளவரசர் சுதனாவிடம் அந்த வேட்டைக்காரன் ஒப்படைக்கிறான். மன்னர் ஆதித்யவம்சன் மற்றும் ராணி சந்திராதேவியின் மகன், சுதனன் ஒரு புகழ்பெற்ற வில்லாளி மற்றும் பாஞ்சால ராஜ்யத்தின் வாரிசு ஆவார். இளவரசன் மனோகராவைக் காதலிக்க அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
பின்னர், இளவரசர் போருக்குச் சென்றபோது, மனோகரா நகரத்திற்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்ததாக அரச ஆலோசகரால் குற்றம் சாட்டப்பட்டு, மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார். அவர் பறந்து சென்று மீண்டும் கிம்னாரா ராஜ்யத்திற்குச் சென்றுவிடுகிறார். இளவரசர் சுதனா அவளைப் பின்தொடர முடிவதற்காக அவர் ஒரு மோதிரத்தையும் கிம்னாரா ராஜ்யத்தை அடைவதற்கான திசைகளையும் விட்டுச் செல்கிறார்.
இளவரசர் சுதனன் பாஞ்சாலைக்குத் திரும்பியபின் அவரைப் பின்தொடர்கிறான். ஒரு துறவியிடம் இருந்து, கிம்னாரா ராஜ்ஜியத்தைக் கண்டறிய விலங்குகளின் மொழியையும், இளவரசியை மீண்டும் வெல்ல தேவையான பிரார்த்தனைகளையும் கற்றுக்கொள்கிறான். பயணம் ஏழு ஆண்டுகள், ஏழு மாதங்கள் மற்றும் ஏழு நாட்கள் ஆகிறது. வழியில், சுதனா ஒரு யக்ஷம் (ஓக்ரே), தீப்பிழம்புகளின் நதி மற்றும் ஒரு பெரிய மரத்தை எதிர்கொள்கிறான். நீண்ட மற்றும் கடினமான சோதனைக்குப் பிறகு, இளவரசன் கிம்னர அரசனைச் சந்திக்கிறான். பலம், விடாமுயற்சி மற்றும் புத்திசாலித்தனத்தை மதிப்பிடும் பல்வேறு சோதனைகள் மூலம் தனது நேர்மையை நிரூபிக்க அரசன் கட்டளையிடுகிறான். முதல் சோதனையில், தோட்டத்தில் உள்ள ஒரு கல் மேசையை சுதனாவைத் தூக்க வைக்கிறார். இரண்டாவது சோதனையில் அவரது வில் திறமையைச் சோதிக்கப்படுகிறது. ஒரே மாதிரியான ஏழு பெண்களில் மனோகரா யார் என்பதை அடையாளம் காண்பதுதான் இறுதிச் சோதனை. அவரது விரலில் உள்ள மோதிரத்தை வைத்து இளவரசன் அடையாளம் காண்கிறான். திருப்தியடைந்த கிம்னார மன்னன் அவர்களது திருமணத்திற்குச் சம்மதிக்கிறான். தம்பதியினர் பாஞ்சாலத்திற்குத் திரும்புகிறார்கள்.
ஜேம்ஸ் ஆர். பிராண்டனின் கூற்றுப்படி, மனோகராவின் கதை தென்கிழக்கு ஆசிய நாடக அரங்கில் பிரபலமான கருப்பொருளாகும். [7]
மனோராவின் கதை பர்மாவில் ( மியான்மர் ) நாடகமாக மாற்றப்பட்டது. அங்கு மனோகராவின் கதாபாத்திரம் மனன்ஹுரி என்று அழைக்கப்பட்டது. இவர் "முட்கள் நிறைந்த கரும்புகளின் காடு", "செம்பு திரவ நீரோடை" மற்றும் "பெலூ" என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு வெள்ளி மலையில் வாழும் ஒன்பது அரச மகள்களில் ஒருவர் என வழங்கப்படுகிறார். அவரது வருங்கால கணவர், பியன்ட்சாவின் இளவரசர் இளவரசர் சுதானா, "தூடானோ" என்ற பெயர் கொண்டுள்ளார். [8] இந்தப் பதிப்பில், இளவரசிகள் மந்திரித்த கச்சையைப் பயன்படுத்திப் பறக்கிறார்கள். மேலும் மனோகரா போன்ற கன்னி ஒரு மந்திரக் கயிற்றால் சிறைபிடிக்கப்பட்டர் எனக் கூறப்படுகிறது. [9]
கதையின் கதாபாத்திரங்கள் தென்கிழக்கு ஆசியாவில் கெவ் மோனோரா மற்றும் ப்ரா சோதோன் என்றும் அழைக்கப்படுகின்றன. [10]
நேபாளத்தின் சமஸ்கிருத பௌத்த இலக்கியங்களிலும், சுசந்திரிமாவின் கதை மற்றும் ஒரு கின்னரி என்ற பெயருடன் காணப்படுகிறது. முக்கிய ஜோடியாக மஹோனாரா மற்றும் சுதனுஷா வழங்கப்படுகின்றனர். [11] நேபாளத்தின் மற்றொரு பதிப்பான கின்னரி அவதானாவில், வேட்டைக்காரன் உத்பலா ஒரு கின்னரியை (கதையில் பெயரிடப்படாத) ஒரு மந்திரக் கயிற்றுடன் பிடிக்கிறார். ஹஸ்தினாவின் இளவரசர் சுதனா தனது வேட்டையாடும் பயணத்தில் கின்னரியின் மீது காதல் கொள்கிறார். [12]
மற்றொரு மொழிபெயர்ப்பில் இளவரசரை சுதனு என்றும் கின்னரியின் துரும மன்னனின் மகள் மனோகரா என்றும் வழங்கப் படுகிறார்கள். [13]
இந்த கதை லாவோஸில்சித்தன் மற்றும் மனோலா என்றும் வழங்கப்படுகிறது. [14]
↑Schiefner, Anton; Ralston, William Shedden. Tibetan tales, derived from Indian sources. London, K. Paul, Trench, Trübner & co. ltd. 1906. pp. xlviii-l and 44-74.
↑Porée-Maspero, Eveline (1962). "III. Le cycle des douze animaux dans la vie des Cambodgiens". Bulletin de l'École française d'Extrême-Orient50 (2): 311–365. doi:10.3406/befeo.1962.1536.
↑Jaini, Padmanabh S. (1966). "The Story of Sudhana and Manoharā: An Analysis of the Texts and the Borobudur Reliefs". Bulletin of the School of Oriental and African Studies, University of London29 (3): 533–558. doi:10.1017/S0041977X00073407.
↑Yousof, Ghulam-sarwar (1 January 1982). "Nora Chatri in Kedah: A Preliminary Report". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society55 (1 (242)): 53–61.
↑Terrai, G. (1956). "VI. Samuddaghosajâtaka. Conte pâli tiré du Pannâsajataka". Bulletin de l'École française d'Extrême-Orient48 (1): 249–351. doi:10.3406/befeo.1956.1291.
↑Porée-Maspero, Eveline. Étude sur les rites agraires des Cambodgiens. Tome I. École Pratique de Hautes Studes - Paris. Paris: Mouton & Co./La Haye. 1962. pp. 657-658.
↑Mitra, Rājendralāla, Raja; Asiatic Society. The Sanskrit Buddhist literature of Nepal. Calcutta: Asiatic Society of Bengal. 1882. pp. 129-131.
↑Mitra, Rājendralāla, Raja; Asiatic Society. The Sanskrit Buddhist literature of Nepal. Calcutta: Asiatic Society of Bengal. 1882. pp. 62-63.
↑The Mahavastu. Volume II. Translated from the Buddhist Sanskrit by J. J. Jones. London: Luzac and Company LTD. 1952. pp. 91-111.
↑Diamond, Catherine (February 2005). "Red Lotus in the Twenty-First Century: Dilemmas in the Lao Performing Arts". New Theatre Quarterly21 (1): 34–51. doi:10.1017/S0266464X04000326.
↑Sooi-Beng, Tan (1988). "The Thai 'Menora' in Malaysia: Adapting to the Penang Chinese Community". Asian Folklore Studies47 (1): 19–34. doi:10.2307/1178249.
Jaini, Padmanabh S. (1966). "The Story of Sudhana and Manoharā: An Analysis of the Texts and the Borobudur Reliefs". Bulletin of the School of Oriental and African Studies, University of London29 (3): 533–558. doi:10.1017/S0041977X00073407.
Schiefner, Anton; Ralston, William Shedden. Tibetan tales, derived from Indian sources. London, K. Paul, Trench, Trübner & co. ltd. 1906. pp. xlviii-l and 44–74.
Bailey, H. W. (1966). "The Sudhana Poem of Ṛddhiprabhāva". Bulletin of the School of Oriental and African Studies, University of London29 (3): 506–532. doi:10.1017/S0041977X00073390.
Dezső, Csaba (2014). "Inspired Poetry: Śāntākaragupta's Play on the Legend of Prince Sudhana and the Kinnarī". Indo-Iranian Journal57 (1/2): 73–104. doi:10.1163/15728536-05701016.
Foucher, A. (1909). "Notes d'archéologie bouddhique". Bulletin de l'École française d'Extrême-Orient9 (1): 1–50. doi:10.3406/befeo.1909.1911.
Ginsburg, Henry (1971). The Sudhana-Manohara tale in Thai: A comparative study based on two texts from the National Library, Bangkok and Wat Machimawat, Songkhla (Thesis). எண்ணிம ஆவணச் சுட்டி:10.25501/SOAS.00029528.
Simmonds, E. H. S. (1967). "'Mahōrasop' in a Thai Manōrā Manuscript". Bulletin of the School of Oriental and African Studies, University of London30 (2): 391–403. doi:10.1017/S0041977X00062297.
Simmonds, E. H. S. (1971). "'Mahōrasop' II: The Thai National Library Manuscript". Bulletin of the School of Oriental and African Studies, University of London34 (1): 119–131. doi:10.1017/S0041977X00141618.