மலஹரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய , "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். விடியற்காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ-ஷாடவ இராகம் ஆகும். இவ்விராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்தும்.
மலஹரி ஆரோகணச் சுரங்கள், C யிலிருந்து தொடக்கம்
மலஹரி அவரோகணச் சுரங்கள், C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1 ), அந்தர காந்தாரம் (க3 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், சுத்த தைவதம் (த1 ஆகிய சுரங்கள் வருகின்றன.
ஆரோகணத்தில் க , நி வர்ஜம். அவரோகணத்தில் நி மட்டும் வர்ஜம்.
இது உபாங்க இராகம் ஆகும்.
புரந்தரதாசர் இந்த இராகத்தில் பிள்ளையார் கீதம் ஒன்றும், மகேஸ்வரர் கீதம் ஒன்றும், விஷ்ணு கீதங்கள் இரண்டும் இயற்றியுள்ளார்.
மலத்தை நீக்குகின்ற இராகம் என்ற பொருளைக் கொண்ட இவ்விராகம் மனித உள்ளத்தில் இருக்கும் மாசை நீக்கி தூய்மைப்படுத்தும் இராகம் எனக் கருதப்படுகின்றது.
இதன் பெயர் பழமையான இசை இலக்கண நூல்களில் காணப்படுகின்றது. (திருவாவடுதுறை ஆதீன ஏட்டுப் பிரதியில் குறிஞ்சிப்பண் என்பது மலஹரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
இந்த இராகம் மழைக்காலத்துக்குரியது எனக் குறிப்பிடப்படுகின்றது.
கீதம் : " ஸ்ரீகணநாத " - ரூபகம் - புரந்தரதாசர்
கீதம் : " கெரயநீரனு " - திரிபுடை - புரந்தரதாசர்
கீதம்: " பதும நாபா " - திரிபுடை - புரந்தரதாசர்
கீதம் : " குந்த கௌர " - ரூபகம் - புரந்தரதாசர்
கிருதி : " பஞ்சமாதங்க " - ரூபகம் - முத்துசுவாமி தீட்சிதர்
கிருதி : " இதுவோ நின் கருணை " - மிஸ்ரசாபு - பெரியசாமி தூரன்
கிருதி : " மேலுகோவையா " - ஆதி - ஷாஜி மகாராஜா
கிருதி : " அனந்தபத்மநாபம் " - ரூபகம் - முத்தையா பாகவதர்
இவற்றையும் பார்க்கவும்[ தொகு ]
↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music , CBH Publications, Trivandrum, Published 1990
B. Subba Rao, Raganidhi , The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய