மலேசிய தலைமைச் செயலாளர் Chief Secretary to the Government Ketua Setiausaha Negara | |
---|---|
மலேசியாவின் சின்னம் | |
மலேசியப் பிரதமர் துறை | |
சுருக்கம் | KSN |
உறுப்பினர் | அமைச்சரவை |
அறிக்கைகள் | பிரதமர் |
பரிந்துரையாளர் | பிரதமர் |
நியமிப்பவர் | மாமன்னர் பிரதமரின் ஆலோசனையின் பேரில் |
முதலாவதாக பதவியேற்றவர் | அப்துல் அசீஸ் அப்துல் மஜீத் Abdul Aziz Abdul Majid |
உருவாக்கம் | 1 ஆகத்து 1957 |
ஊதியம் | MYR 23,577 மாத ஊதியம் |
இணையதளம் | www |
மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் (மலாய்: Ketua Setiausaha Negara Malaysia (KSN); ஆங்கிலம்: Chief Secretary to the Government of Malaysia) என்பவர் மலேசிய பொதுச் சேவையில் மிக மூத்த அதிகாரி; மலேசிய அமைச்சரவையின் செயலாளர்; மற்றும் பிரதமர் துறையின் பொதுச் செயலாளர் ஆவார்.
மலேசியாவில் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் என்ற பதவி மலாயா மாநிலங்களின் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பு இருந்தே மலாயா நிர்வாகத் துறையின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
1911- ஆம் ஆண்டில் ’அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர்’ பதவி மலாயாவில் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் இந்தப் பதவி ரெசிடென்ட்-ஜெனரல் எனும் தலைமை ஆலோசகர் பதவி (Resident-General) என அழைக்கப்பட்டது.
முதன்முதலாக எட்வர்ட் லூயிஸ் புரோக்மேன் (Edward Lewis Brockman) என்பவர் தலைமைச் செயலாளர் பதவியை வகித்தார்.
1911-ஆம் ஆண்டில் இருந்து 1920-ஆம் ஆண்டு வரையில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளராக இருந்தார். கோலாலம்பூர் நகர திட்டமிடல் சேவையை மேற்பார்வையிட நகர திட்டமிடல் குழுவை நிறுவியவரும் இவரே ஆவார். [[கோலாலம்பூர்| கோலாலம்பூரில் உள்ள புரோக்மேன் சாலை (Brockman Road), அவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது அந்தச் சாலை டத்தோ ஓன் சாலை (Jalan Dato' Onn)என்று அழைக்கப் படுகிறது.
1936-ஆம் ஆண்டிற்குப் பிறகு, தலைமைச் செயலாளரின் நிர்வாக அதிகாரங்கள் மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரிடம் வழங்கப்பட்டன.
மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், மலேசிய பொதுச் சேவையில் உயர்த் தலைவர்; மற்றும் மலேசிய அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள அரசு ஊழியர் ஆவார்.
அவர் மலேசிய அரசாங்கத்தின் செயலாளராக அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வதுடன் அவற்றின் முடிவுகள் செயல்படுத்துவதையும் கண்காணிக்கிறார்.[1]
மலேசிய அமைச்சரவையில் மிகப் பெரிய அமைச்சான மலேசியப் பிரதமர் துறைக்கும் தலைமை தாங்குகிறார். இவர் பிரதமருக்கு ஆதரவு வழங்குவதுடன், பொதுச் சேவையின் நிர்வாகம், அரசு நெறிமுறை மற்றும் இசுலாமிய விவகாரங்கள் ஆகியவற்றையும் கவனித்துக் கொள்கிறார்.[1]
அத்துடன் மலேசிய அமைச்சரவையில் உள்ள அமைச்சுகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் தலைமை இயக்குநர்கள் கூட்டங்களுக்கும் இவர் தலைமை தாங்குகிறார்.[2]
மலேசியாவின் தற்போதைய தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ முகமட் சுக்கி அலி ஆவார்.
தலைமைச் செயலாளர்கள் பட்டியல் பின்வருமாறு:
# | தோற்றம் | தலைமைச் செயலாளர் | பதவி காலம் | பிரதமர் | ||
---|---|---|---|---|---|---|
பதவியேற்பு | பதவி முடிவு | பதவி காலம் | ||||
1 | துன் அப்துல் அசீஸ் அப்துல் மஜீத் (Abdul Aziz Abdul Majid) (1908 – 1975) |
1 ஆகத்து 1957 | 31 ஆகத்து 1964 | 7 ஆண்டுகள், 30 நாட்கள் | துங்கு அப்துல் ரகுமான் (31 ஆகத்து 1957 – 22 செப்டம்பர் 1970) அப்துல் ரசாக் உசேன் (22 செப்டம்பர் 1970 – 14 சனவரி 1976) உசேன் ஓன் (15 சனவரி 1976 – 16 சூலை 1981) | |
2 | டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ அப்துல் ஜமில் அப்துல் ராயிஸ் (Abdul Jamil Abdul Rais) (1912 – 1994) |
1 செப்டம்பர் 1964 | 6 நவம்பர் 1967 | 3 ஆண்டுகள், 66 நாட்கள் | ||
3 | டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ துங்கு முகமட் துங்கு பெசார் புர்கானுடின் (Tunku Mohamad Tunku Besar Burhanuddin) (1912 – 1994) |
7 நவம்பர் 1967 | 31 திசம்பர் 1969 | 2 ஆண்டுகள், 54 நாட்கள் | ||
4 | டான் ஸ்ரீ அப்துல் காதர் சம்சுதீன் (Abdul Kadir Shamsuddin) (1920 – 1978) |
1 சனவரி 1970 | 30 செப்டம்பர் 1976 | 6 ஆண்டுகள், 273 நாட்கள் | ||
5 | துன் அப்துல்லா முகமட் சாலே (Abdullah Mohd Salleh) (1926 – 2006) |
1 அக்டோபர் 1976 | 31 திசம்பர் 1978 | 2 ஆண்டுகள், 91 நாட்கள் | உசேன் ஓன் (Hussein Onn) (15 சனவரி 1976 – 16 சூலை 1981) மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) (16 சூலை 1981 – 30 அக்டோபர் 2003) | |
6 | துன் அப்துல்லா அயூப் (Abdullah Ayub) (1926 – 2018) |
1 சனவரி 1979 | 30 நவம்பர் 1982 | 3 ஆண்டுகள், 333 நாட்கள் | ||
7 | டான் ஸ்ரீ டத்தோ அசீம் அமான் (Hashim Aman) (1929 – 2018) |
1 திசம்பர் 1982 | 14 சூன் 1984 | 1 ஆண்டு, 196 நாட்கள் | ||
8 | டான் ஸ்ரீ டத்தோ பாதுக்கா சாலேவுதீன் முகமட் (Sallehuddin Mohamed) (பிறப்பு.1932) |
15 சூன் 1984 | 31 சனவரி 1990 | 5 ஆண்டுகள், 230 நாட்கள் | மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) (16 சூலை 1981 – 30 அக்டோபர் 2003) அப்துல்லா அகமது படாவி (Abdullah Ahmad Badawi) (31 அக்டோபர் 2003 – 3 ஏப்ரல் 2009) | |
9 | துன் அகமட் சார்ஜி அப்துல் அமீது (Ahmad Sarji Abdul Hamid) (1938 – 2021) |
1 பெப்ரவரி 1990 | 16 செப்டம்பர் 1996 | 6 ஆண்டுகள், 228 நாட்கள் | ||
10 | டான் ஸ்ரீ Abdul Halim Ali (அப்துல் அலீம் அலி) (பிறப்பு.1943) |
17 செப்டம்பர் 1996 | 31 சனவரி 2001 | 4 ஆண்டுகள், 136 நாட்கள் | ||
11 | டான் ஸ்ரீ சம்சுதீன் ஒசுமான் (Samsudin Osman) (பிறப்பு.1946) |
1 பெப்ரவரி 2001 | 2 செப்டம்பர் 2006 | 5 ஆண்டுகள், 213 நாட்கள் | ||
12 | டான் ஸ்ரீ முகமட் சீடேக் ஒசுமான் (Mohd Sidek Hassan) (பிறப்பு.1952) |
3 செப்டம்பர் 2006 | 23 சூன் 2012 | 5 ஆண்டுகள், 294 நாட்கள் | அப்துல்லா அகமது படாவி (Abdullah Ahmad Badawi) (31 அக்டோபர் 2003 – 3 ஏப்ரல் 2009) நஜீப் ரசாக் (Najib Razak) (3 ஏப்ரல் 2009 – 9 மே 2018) | |
13 | டான் ஸ்ரீ அலி அம்சா (Ali Hamsa) (1955 – 2022) |
24 சூன் 2012 | 29 ஆகத்து 2018 | 6 ஆண்டுகள், 66 நாட்கள் | நஜீப் ரசாக் (Najib Razak) (3 ஏப்ரல் 2009 – 9 மே 2018) மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) (10 மே 2018 – 24 பிப்ரவரி 2020) | |
14 | டான் ஸ்ரீ இசுமாயில் பாக்கார் (Ismail Bakar) (பிறப்பு.1960) |
29 ஆகத்து 2018 | 1 சனவரி 2020 | 1 ஆண்டு, 125 நாட்கள் | மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) (10 மே 2018 – 24 பிப்ரவரி 2020) | |
15 | டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ}} முகமட் சுக்கி அலி (Mohd Zuki Ali) (பிறப்பு.1962) |
1 சனவரி 2020 | Incumbent | 4 ஆண்டுகள், 336 நாட்கள் | மகாதீர் பின் முகமது (10 மே 2018 – 24 பிப்ரவரி 2020) முகிதீன் யாசின் (Muhyiddin Yassin) (1 மார்ச் 2020 – 16 ஆகத்து 2021) இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) (21 ஆகத்து 2021 – 23 நவம்பர் 2022) அன்வர் இப்ராகீம் (Anwar Ibrahim) (தொடக்கம் 24 நவம்பர் 2022) |