![]() | |
குறிக்கோளுரை | அறிவு, ஒழுக்கம் மற்றும் பக்தி (Berilmu, Berdisiplin Dan Bertakwa) (Knowledgeable, Disciplined and Devout) |
---|---|
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1998 |
வேந்தர் | துவாங்கு ஆயிசா ரொகானி (Tuanku Aishah Rohani) |
மாணவர்கள் | 33,948 (2024)[1] |
பட்ட மாணவர்கள் | 11,645 (2024)[1] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 1,173 (2024)[1] |
அமைவிடம் | Bandar Baru Nilai, 71800 Nilai, Negeri Sembilan , , , 2°50′37″N 101°46′37″E / 2.84361°N 101.77694°E |
சேர்ப்பு | ASAIHL, ACU, இசுலாமிய உலகக் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு[2] |
இணையதளம் | www |
மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Sains Islam Malaysia; ஆங்கிலம்:Islamic Science University of Malaysia என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், நீலாய், புறநகரில் உள்ள ஒரு பன்னாட்டு இசுலாமியப் பல்கலைக்கழகம் ஆகும். ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகமான இந்தப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு வளாகங்கள் உள்ளன.
நெகிரி செம்பிலான், நீலாய் நகர்ப்பகுதியில் முதன்மை வளாகம்; மற்றும் கோலாலம்பூர் பாண்டான் இண்டாவில் ஒரு மருத்துவ வளாகம் (Fakulti Perubatan dan Kesihatan (FPSK); Fakulti Pergigian (FPg) என இரு வளாகங்கள் உள்ளன.
மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் (USIM) என்பது 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மலேசிய அரசாங்கத்தால் முதன்முதலில் நிறுவப்பட்ட ஒரு மலேசிய இசுலாமிய பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது.
இது நாட்டின் 12-ஆவது பொது உயர்க்கல்வி நிறுவனம்; மற்றும் மலேசிய இசுலாமிய பல்கலைக்கழகக் கல்லூரி (Kolej Universiti Islam Malaysia) (KUIM) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். 13 மார்ச் 1998-இல் பொதுப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது
தொடக்கத்தில் மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் என்பது பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழக வளாகத்தில் (International Islamic University Malaysia) (IIUM) அமைக்கபட்டது.[3] பின்னர் இந்தப் பல்கலைக்கழகம் சனவரி 2000-இல் பாங்கியில் உள்ள மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் செயல்படத் தொடங்கியது.[4]
15 சூலை 2005 அன்று, மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், நீலாய் நகரில் உள்ள நிரந்தர வளாகத்திற்கு மாற்றப்பட்டன. அதே வேளையில் மருத்துவ வளாகம் சிலாங்கூர் அம்பாங் பகுதியிலேயே செயல்பட்டது; நிரந்தர வளாகத்திற்கு மாற்றப்பட்டவில்லை.
இந்தப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக பல்கலைக்கழகத் தகுதிக்கு மேம்படுத்தப்பட்டு 1 பிப்ரவரி 2007 அன்று மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது. 2024-ஆம் ஆண்டு சூலை வரையில், மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் 33,948 மாணவர்களைப் பதிவு செய்துள்ளது.[1]
பல்கலைக்கழகத்தின் தற்போதைய துறைகள்: