மலேசிய கூட்டரசு சாலைகள் Malaysian Federal Roads System Sistem Jalan Persekutuan Malaysia | |
---|---|
மலேசிய கூட்டரசு சாலை சின்னம் | |
தகவல் | |
பராமரிப்பு | மலேசிய பொதுப்பணி துறை (Malaysian Public Works Department) மலேசிய பொதுப் பணி அமைச்சு (JKR) |
அமைவிடம் | மலேசியா |
போக்குவரத்து | மலேசிய கூட்டரசு சாலைகள் |
உருவாக்கம் | 1957 - தீபகற்ப மலேசியா; 1986 - சபா; சரவாக் |
மலேசிய கூட்டரசு சாலைகள் (மலாய்: Sistem Jalan Persekutuan Malaysia; ஆங்கிலம்: Malaysian Federal Roads System); (சுருக்கம்: MES) என்பது மலேசியாவில் உள்ள கூட்டரசு சாலைகளின் வலையமைப்பாகும். இந்த அமைப்பு மலேசிய கூட்டரசு சாலைகளின் முதன்மையான வலையமைப்பை உருவாக்குகிறது.[1]
மலேசியாவில் உள்ள அனைத்துக் கூட்டரசு சாலைகளும் (Federal Roads) மலேசிய பொதுப் பணி அமைச்சின் (Ministry of Works) (MOW) கீழ் உள்ளன.[2]
அமைச்சர் செயல்பாடுகள் சட்டம் 1969 (Ministerial Functions Act 1969)-இன் படி; கூட்டரசு சாலைகள் சட்டம் 1959 (Federal Roads Act 1959)-இன் கீழ் அரசிதழில் வெளியிடப்பட்ட அனைத்து கூட்டாட்சி சாலைகளையும் திட்டமிடுதல்; உருவாக்குதல்; மற்றும் பராமரித்தல்; மலேசிய பொதுப் பணி அமைச்சின் பொறுப்பாகும்.[3]
பெரும்பாலான கூட்டரசு சாலைகளின் திட்டங்கள் மலேசிய பொதுப்பணி துறையினால் (Jabatan Kerja Raya) (JKR) உருவாக்கப்பட்டு பராமரிக்கப் படுகின்றன. மலேசிய பொதுப்பணி துறை என்பது மலேசிய பொதுப் பணி அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
இதில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு விதிவிலக்கு. இந்த இரண்டு மாநிலங்களிலும் மலேசிய பொதுப்பணி துறை என்பது அந்தந்த மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளன.