மலேசிய கூட்டரசு சாலை 24

மலேசிய கூட்டரசு சாலை 24
Malaysia Federal Route 24
Laluan Persekutuan Malaysia 24

மூவார்–யோங் பெங் சாலை
Muar–Yong Peng Road
Jalan Muar–Yong Peng
வழித்தடத் தகவல்கள்
நீளம்:65.31 km (40.58 mi)
பயன்பாட்டு
காலம்:
1869 –
வரலாறு:கட்டுமானம்: 1870; சீரமைப்பு: 1890
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:மூவார் (பண்டார் மகாராணி)
 

5 கூட்டரசு சாலை 5

224 மூவார் புறவழிச்சாலை
J135 சுங்கை தெராப்–சிமபாங் ஜெராம்
J131 புக்கிட் சாலை
85 பாரிட் யூசோப் சாலை
J23 பாகோ–பாரிட் சூலோங் சாலை
J19 பெசராய் சாலை
J126 பாரிட் சூலோங்–தொங்காங்
J13 தொங்காங் பெச்சா சாலை
J35 செரி மேடான் சாலை
J125 செங்குவாங் சாலை

E2 AH2 மலேசிய தெற்கு வழித்தடம்

1 AH142 கூட்டரசு சாலை 1
கிழக்கு முடிவு:யோங் பெங்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
புக்கிட் பக்ரி; பாரிட் சூலோங்; பத்து பகாட்; தொங்காங் பெச்சா; பாரிட் யானி
நெடுஞ்சாலை அமைப்பு

மலேசிய கூட்டரசு சாலை 24 அல்லது மூவார்–யோங் பெங் சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 24; அல்லது Muar–Yong Peng Road; மலாய்: Laluan Persekutuan Malaysia 24 அல்லது Jalan Muar–Yong Peng) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான சாலை ஆகும்.[1]

மேற்கில் மூவார் நகரத்தையும்; கிழக்கில் யோங் பெங் நகரத்தையும் இணைக்கும் இந்தச் சாலை, யோங் பெங் வழியாக, மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்திற்கான ஒரு முக்கியச் சாலையாகவும் அமைகிறது.[2]

பொது

[தொகு]

இந்தச் சாலை 65.31 கிமீ (40.58 மைல்) நீளம் கொண்டது; மற்றும் ஜொகூர் பத்து பகாட் மாவட்டத்தில் ஒரு முக்கியச் சாலையாகவும்; தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் முக்கியச் கூட்டரசு சாலையாகவும் விளங்குகிறது.

மலேசிய கூட்டரசு சாலை 24-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது மூவார் நகரில் உள்ளது.

மலேசிய கூட்டரசு சாலை 23-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]

சிறப்புக் கூறுகள்

[தொகு]

இந்தச் சாலையின் சிறப்புக் கூறுகள்:

  • பாரிட் சூலோங் வரலாற்றுப் பாலம் 1997-இல் இடிக்கப்பட்டது
  • பாரிட் சூலோங்கில் உள்ள பாரிட் சுலோங் போர் நினைவுச்சின்னம்
  • பக்ரி வரலாற்றுத் தளத்தின் முற்றுகை
  • இரண்டாம் உலகப் போரில் மூவார் போரின் பக்ரி சப்பானிய போர் கல்லறை

வரலாறு

[தொகு]

மலேசிய கூட்டரசு சாலை 24; ஜொகூர் மாநிலத்தின் தொடக்கக்காலச் சாலைகளில் ஒன்றாகும். 1869-இல் கிராமச் சாலையாக உருவாக்கப்பட்டு; 1870-இல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் 1890-இல் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்போது இந்த மலேசிய கூட்டரசு சாலை 24; மலாயாவின் மிக நீளமான சாலையாகச் சாதனையும் படைத்தது. குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது இந்த சாலை, குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளைக் கண்டுள்ளது.

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lembaga Lebuhraya Malaysia". www.llm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
  2. "Public Works Department (JKR) Malaysia" (PDF). JKR Malaysia. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
  3. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]