மலேசிய கூட்டரசு சாலை 50

மலேசிய கூட்டரசு சாலை 50
Malaysia Federal Route 50
Laluan Persekutuan Malaysia 50

பத்து பகாட்-குளுவாங்-மெர்சிங் சாலை
Batu Pahat–Kluang–Mersing Road
Jalan Batu Pahat–Kluang–Mersing

வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு மலேசிய பொதுப்பணித் துறை
நீளம்:135.28 km (84.06 mi)
பயன்பாட்டு
காலம்:
1911 –
வரலாறு:கட்டுமானம் 1919
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:பத்து பகாட் நகரம்
 5 கூட்டரசு சாலை 5

1 கூட்டரசு சாலை 1

E2 AH2 மலேசிய தெற்கு வழித்தடம்

173 குளுவாங் பெசார் சாலை
172 குளுவாங் உள்வட்டச் சாலை
91 கூட்டரசு சாலை 91
184 குளுவாங் பாடாங் தேம்பாக் சாலை
உத்தாமா நித்தார் சாலை

3 AH2 கூட்டரசு சாலை 3
கிழக்கு முடிவு:ஜெமாலுவாங்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பாரிட் ராஜா; ஆயர் ஈத்தாம்; குளுவாங்; ககாங்; மெர்சிங்
நெடுஞ்சாலை அமைப்பு

பத்து பகாட்-குளுவாங்-மெர்சிங் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 50 (ஆங்கிலம்: Malaysia Federal Route 50; அல்லது Batu Pahat–Kluang–Mersing Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 50 அல்லது Jalan Batu Pahat–Kluang–Mersing) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட்; குளுவாங்; மெர்சிங் மாவட்டங்களில் உள்ள கூட்டரசு சாலை ஆகும்.[1]

ஜொகூர் மாநிலத்தில், மேற்கில் உள்ள பத்து பகாட் நகரத்தையும் கிழக்கில் உள்ள ஜெமாலுவாங் நகரத்தையும் இந்தச் சாலை இணைக்கிறது.

பொது

[தொகு]

ஆயர் ஈத்தாம் மாற்றுச் சாலை வழியாக மலேசிய தெற்கு வழித்தடத்தை அடைவதற்கு இது ஒரு முக்கியச் சாலையாகவும் அமைகிறது.

இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; மலேசிய கூட்டரசு சாலை 5-இன் சாலைப் பரிமாற்றத்தில், சோகா மலைக்கு (Mount Soga) அருகில், பத்து பகாட் நகரில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

1911-ஆம் ஆண்டில், ஜொகூர் மாநில அரசு பிரித்தானிய காலனி அரசாங்கத்துடன் இணைந்து ஜொகூர் பாருவில் இருந்து பத்து பகாட் மற்றும் மூவார் வரையிலான சாலை வலையமைப்பை உருவாக்கியது.[2] இதன் விளைவாக, பத்து பகாட்-குளுவாங்-மெர்சிங் சாலை 1919-இல் நிறைவடைந்தது.[3] அங்கு இன்றைய மலேசிய கூட்டரசு சாலை 5-இன் ஒரு பகுதி உள்ளது.[4]

2002-ஆம் ஆண்டு, பத்து பகாட்டில் இருந்து குளுவாங் வரையிலான நான்கு வழிப்பாதையுடன், இந்த மலேசிய கூட்டரசு சாலை 50 ஓரளவிற்கு மேம்படுத்தப்பட்டது. மீதமுள்ள சாலை இரண்டு வழிச்சாலையாக உள்ளது.[4]

சனவரி 13, 2007 அன்று, குளுவாங்-மெர்சிங் சாலையில் உள்ள சுங்கை செம்பெரோங் பாலம் திடீர் வெள்ளத்தின் காரணமாக இடிந்து விழுந்தது.

சாலைத் தரம்

[தொகு]

இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[5]

ககாங்-கங்கார் லெங்கோர்-ஜெமாலுவாங் சாலைப் பகுதியில் குரங்குகள் மற்றும் யானைகளின் நடமாட்ட அடையாள அறிவிப்புகள் உள்ளன.

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. Johore Annual Report 1911
  3. Abd. Hamid Abd. Majid (1980-05-01). "1.1 - Sejarah Perkembangan Jalanraya Sebelum Merdeka". Analisa Rangkaian Jalan Raya dan Kaitannya Dengan Pembangunan Ekonomi (PDF) (Diploma). Universiti Teknologi MARA. p. 8. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
  4. "Sejarah lengkap Jalan Persekutuan 5". Blog Jalan Raya Malaysia. 2015-11-16. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
  5. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]