Malaysian Space Agency Agensi Angkasa Malaysia MYSA | |
![]() அங்காசா விண்வெளித் திட்டம், 2007 | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 20 பெப்ரவரி 2019 |
முன்னிருந்த அமைப்புகள் |
|
ஆட்சி எல்லை | ![]() |
தலைமையகம் | No.13, Jalan Tun Ismail, 50480 கோலாலம்பூர்![]() 03°08′52″N 101°41′43″E / 3.14778°N 101.69528°E |
மூல அமைப்பு | மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு |
வலைத்தளம் | www |
மலேசிய விண்வெளி நிறுவனம் (மலாய்: Agensi Angkasa Malaysia; ஆங்கிலம்: Malaysian Space Agency) (MYSA); என்பது மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு நிறுவனம் ஆகும்.[1][2]
20 பிப்ரவரி 2019 அன்று, மலேசிய தொலையுணர் நிறுவனம் (Malaysian Remote Sensing Agency) மற்றும் மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம் (Malaysian National Space Agency) ஆகிய இரண்டு அமைப்புகளையும் இணைத்து, மலேசிய விண்வெளி நிறுவனம் எனும் புதிய நிறுவனத்தை அமைப்பதற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.[3]
மார்ச் 2019-இல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, விண்வெளி பயன்பாட்டு மேம்பாட்டில்; மலேசிய விண்வெளி நிறுவனம் கவனம் செலுத்தும் என்று மலேசிய எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் யோ பீ யின் (Yeo Bee Yin) அறிவித்தார்.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், உணவுப் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை; மற்றும் காலநிலை மாற்ற மேலாண்மை; ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு பொது நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும்; செயற்கைக் கோள் தரவுகள் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்கும்; மலேசிய விண்வெளி நிறுவனம் உதவி புரியும் என்றும் அவர் கூறினர்.
சேகரிக்கப்பட்ட தரவுகளும் தகவல்களும், தனியார் துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும்; தனியார் துறையின் சொந்த புத்தாக முறைமைகளுக்கு அந்தத் தரவுகளும் தகவல்களும் உதவும் என்றும் அவர் கூறினர். 2020-ஆம் ஆண்டு தொடக்கம், துவான் அஜி அசுலிகாமில் நாபியா (Tuan Haji Azlikamil Napiah) என்பவர் மலேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)