மஸ்ஜித் தானா (P134) மலேசிய மக்களவைத் தொகுதி மலாக்கா | |
---|---|
Masjid Tanah (P134) Federal Constituency in Malacca | |
மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி (P134 Masjid Tanah) | |
மாவட்டம் | அலோர் காஜா மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 69,174 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | மஸ்ஜித் தானா தொகுதி |
முக்கிய நகரங்கள் | மஸ்ஜித் தானா, சுங்கை ஊடாங், கோலா சுங்கை பாரு, தஞ்சோங் பிடாரா |
பரப்பளவு | 325 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | மாஸ் இர்மியாத்தி சம்சுதீன் (Mas Ermieyati Samsudin) |
மக்கள் தொகை | 95,689[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Masjid Tanah; ஆங்கிலம்: Masjid Tanah Federal Constituency; சீனம்: 马日丹那国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P134) ஆகும்.[5]
மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
அலோர் காஜா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கிழக்கில் ஜாசின் மாவட்டம்; தெற்கில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் அலோர் காஜா.
அலோர் காஜா என்பது மலாக்கா மாநிலத்தின் மக்களவைத் தொகுதியும் ஆகும். இந்த மாவட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டம்; ரெம்பாவ் மாவட்டம்; மற்றும் போர்டிக்சன் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு அருகில் உள்ளது.
அலோர் காஜா மாவட்டம் 31 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.
மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் மஸ்ஜித் தானா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P134 | 2004–2008 | அபு செமான் யூசோப் (Abu Seman Yusop) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | மாஸ் இர்மியாத்தி சம்சுதீன் (Mas Ermieyati Samsudin) | ||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018–2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
மாஸ் இர்மியாத்தி சம்சுதீன் (Mas Ermieyati Samsudin) | பெரிக்காத்தான் நேசனல் | 25,604 | 46.77 | 46.77 | |
அப்துல் அக்கிம் அப்துல் வகீட் (Abdul Hakim Abdul Wahid) | பாரிசான் நேசனல் | 21,193 | 38.71 | 15.39 ▼ | |
முத்தலிப் ஒசுமான் (Muthalib Uthman) | மூடா | 7,445 | 13.60 | 13.60 | |
அன்டிரா வீரவான் அபு பக்கர் (Handrawirawan Abu Bakar) | தாயக இயக்கம் | 507 | 0.93 | 0.93 | |
மொத்தம் | 54,749 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 54,749 | 99.06 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 521 | 0.94 | |||
மொத்த வாக்குகள் | 55,270 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 69,174 | 79.90 | 3.87 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)