மாஜ்ஹா( Majha, Punjabi: ਮਾਝਾ (Gurmukhi), ماجھا (ஷாமுகி); Mājhā) என்பது பஞ்சாபின் ஒரு வட்டாரமாகும். இதன் எல்லைகளாக நீர் நிலைகளான[note 1]பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறு போன்றவற்றின் இடையில் வடமுனையாக ஜீலம் ஆற்றின் விரிவுவரை உள்ளது.[1] மாஜ்ஹாவுக்குள் அடங்கிய பகுதிகளாக பரி டோப் ( பியாஸ் ஆறு மற்றும் ராவி ஆறு ஆகியவற்றுக்குள் அடங்கிய பகுதி), ரிச்சா டோப் ( ராவி ஆறு மற்றும் செனாப் ஆறு ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதி), போன்றவையும் ஜீச் டோப் பகுதியின் ஒரு சிறிய பகுதியும் ( ஜீலம் மற்றும் செனாப் ஆறு களுக்கு இடைபட்ட பகுதி).[2] மாஜ்ஹா வட்டாரம் பஞ்சாப் பகுதியின் இதயம் போன்ற பகுதியில் உள்ளது. மாஜ்ஹா "Mājhā" (ਮਾਝਾ) அல்லது "Mānjhā" (ਮਾਂਝਾ) என்ற சொல்லின் பொருள் "மையம்" அல்லது "மையத்தில் உள்ள இடம்" என பொருள் தரக்கூடியது. இந்த வட்டார மக்களினத்தவர் மாஜ்ஹா என அழைக்கப்படுகின்றனர்.