மாதவ் காட்கில் | |
---|---|
மாதவ் காட்கில் | |
பிறப்பு | 1942 புனே, மகாராட்டிரம் |
தேசியம் | இந்தியர் |
துறை | சூழலியல் ஆய்வாளர் |
மாதவ் காட்கில் (Madhav Gadgil, பிறப்பு: 1942) இந்தியாவின் புனே நகரில் பிறந்த சூழலியல் ஆய்வாளர் ஆவார்.[1]
மாதவ் காட்கில் புனே பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிப்பை முடித்தார், பின்னர் மும்பையில் சூழலியல் கணிதத்தில் ஆய்வாளர் பட்டம் பெற்றார். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியாரகவும் பணியாற்றினார். 1973 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி, அங்கே சூழலியல் அறிவியல் மையத்தை நிறுவினார். மேலும் ஸ்டேண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். சூழலியல் தொடர்பான புத்தகங்களும் எழுதியுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது தொடர்பான ஆணையத்தின் தலைவராகப் பங்காற்றினார்.[2]
இந்திய அரசின் பத்ம ஶ்ரீ, பத்ம பூசண் உள்ளிட்ட பல்வேறு மாநில மத்திய அரசு விருதுகளையும், வெளிநாட்டு அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.[3][4][5]