மாதா சுந்திரி மகளிர் கல்லூரி

மாதா சுந்திரி மகளிர் கல்லூரி
உருவாக்கம்1967 (1967)
நிறுவுனர்சீக்கிய குருத்துவாரா மேலாண்மைக் குழு, தில்லி
Academic affiliation
தில்லி பல்கலைக்கழகம்
முதல்வர்அர்பிரீத் கவுர்
அமைவிடம்
மாதா சுந்தரி சாலை, மந்தி இல்லம்,
,
நியூ தில்லி
,
தில்லி
,
110002
,
28°38′00″N 77°13′59″E / 28.6332521°N 77.2330018°E / 28.6332521; 77.2330018
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்mscw.ac.in
மாதா சுந்திரி மகளிர் கல்லூரி is located in டெல்லி
மாதா சுந்திரி மகளிர் கல்லூரி
Location in டெல்லி
மாதா சுந்திரி மகளிர் கல்லூரி is located in இந்தியா
மாதா சுந்திரி மகளிர் கல்லூரி
மாதா சுந்திரி மகளிர் கல்லூரி (இந்தியா)

மாதா சுந்தரி மகளிர் கல்லூரி (Mata Sundri College for Women) என்பது இந்தியாவின் தலைநகர் தில்லியில் தில்லி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாகும். இந்தக் கல்லூரி 1967ஆம் ஆண்டு தில்லி சீக்கிய குருத்துவாரா மேலாண்மைக் குழுவால் நிறுவப்பட்டது. தற்போது கல்லூரியில் பல்வேறு சான்றிதழ், பட்டயம், இளநிலை, முதுநிலை படிப்புகளில் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்தக் கல்லூரி மத்திய தில்லியில் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. [1] இது பத்தாவது சீக்கிய குரு குரு கோபிந்த் சிங்கின் மனைவி மாதா சுந்தரியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது மாதா சுந்தரி குருத்துவாராவிற்கு அருகில் அமைந்துள்ளது.[2]

வரலாறு

[தொகு]

மாதா சுந்தரி கல்லூரி 1967ஆம் ஆண்டு 21 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்டது. 1968 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் பஞ்சாபி, இந்தி, சமசுகிருதம், வரலாறு, அரசியல் அறிவியல், தத்துவம் ஆகியவற்றில் இளங்கலைப் படிப்புகள் வழங்கப்பட்டன. பஞ்சாப், சமசுகிருத மொழிகளில் முதுநிலை படிப்புகள் முறையே 1976, 1978ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. கணிதம், வணிகவியல் உள்ளிட்ட கூடுதல் படிப்புகள், 1978-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

வழங்கப்படும் படிப்புகள்

[தொகு]

இந்தக் கல்லூரி பல்வேறு இளநிலை, முதுகலை படிப்புகளை வழங்குகிறது.[3]

இளங்கலை படிப்புகள்

[தொகு]
  • மனிதநேயம்

ஆங்கிலம், இந்தி, வரலாறு, தத்துவம், அரசியல் அறிவியல், உளவியல், பஞ்சாபி, சமற்கிருதம்

  • வணிகவியல்

இளநிலை வணிகவியல்,

இளநிலை கணிதம்

சான்றிதழ்/பட்டயப் படிப்புகள்

[தொகு]
  • பகுதி நேரச் சான்றிதழ்/பட்டயம்/மேம்பட்ட பட்டயப்படிப்பு:- கணினி, கணினிப் பயன்பாடுகள், ஜவுளி வடிவமைப்பு, பயணம் மற்றும் சுற்றுலா

வசதிகள்

[தொகு]

கல்லூரியில் ஒரு பெரிய, விசாலமான நூலகம் உள்ளது. [4]

போக்குவரத்து

[தொகு]

ஐடிஓ மெட்ரோ நிலையம் கல்லூரி வளாகத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mata Sundri College for Women".
  2. "Mata Sundari".
  3. "Mata Sundri".
  4. "Mata Sundri college library".