மாயாஜால் (Mayajaal) என்பது தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையமாகும். இது கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கானத்தூரில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு முப்பது ஏக்கர்களாகும்[1]. இது பல்பொருள் அங்காடி, விளையாட்டு மையம், ஓய்வகம் மற்றும் பல்வகை திரையரங்குகள் கொண்ட இடமாகும்[2]. இங்கு 16 பல்வகை திரையரங்குகள் உள்ளன. இதுவே ஆசியாவிலேயே மிக அதிகமான பல்வகை திரையரங்குகள் கொண்ட இடமாகும். விளையாட்டு மையம் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஓய்வகம் 2005 ஆம் ஆண்டு நாற்பது அறைகளுடன் திறக்கப்பட்டது[3] . முப்பதாயிரம் சதுர அடிகள் கொண்ட பல்பொருள் அங்காடி 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது[4][5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)