இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மார்கரெட் கொங்கே | |
---|---|
பிறப்பு | 1943 |
பணி | மானிடவியலர் |
வேலை வழங்குபவர் | |
விருதுகள் | Fellow of the American Association for the Advancement of Science, Huxley Memorial Medal |
மார்கரெட் கொங்கே (Margaret Conkey) (பிறப்பு 1943) ஒரு தொல்லியலாளர்.[1]
கொங்கே 1965இல் மவுண்ட் ஓல்யோக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[1] இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்கேலியில் மாந்தரினவியல் (Anthropology) பேராசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது இவர் அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வு இறுவன இயக்குநராகவும் மாந்தரினவியல் கட்டிலின் 1960க்கான தகைமைப் பேராசிரியராகவும் இருந்தார்.[2] அங்கு அவரது ஆய்வு, பிரெஞ்சு பைரெனீசுகள் பற்றியதாக அமைந்தது. இவர் பின்னைப் பழங்கற்காலக் கற்கருவிப் பரவலைப் பற்றி விரிவாக ஆய்வு செய்தார்.
இவர் தொல்லியலில் முதன்முதலாகப் பெண்ணியக் கோட்பாட்டைப் பயன்படுத்தினார். எனவே இவர் பெண்ணியத் தொல்லியல், பாலினத் தொல்லியல் ஆகிய தொல்லியலின் துணைப்புலங்களின் முன்னோடியாவார்.[1] இவரது அண்மை ஆய்வு 40,000-15,000 இடைப்பட்ட தெற்கு பிரான்சு பழங்கற்காலக் கலை விளக்கப் பகுப்பாய்வு ஆகும் இவர் குகையோவியங்கள் ஆண்களின் நடைமுறையாக இருந்தது என்பதையும் அது ஒரு பரிவு மந்திரப்பணி என்பதையும் இப்போது இவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.[1]
பேராசிரியர் கொங்கே 2009இல் அமெரிக்கத் தொல்லியல் கழகத்தின் தலைவரானார்.[3]