மார்டினா வில்லிங்

மார்ட்டினா வில்லிங்
தனிநபர் தகவல்
பிறப்பு3 அக்டோபர் 1959 (1959-10-03) (அகவை 65)
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
மாற்றுத்திறனாளர்கண்பார்வையற்றவர் உடலியக்கக் குறைபாடு உள்ளவர்
மாற்றுத்திறன் வகைப்பாடுF56 (F11 until 1994)
நிகழ்வு(கள்)ஈட்டி எறிதல், தட்டு எறிதல், குண்டு எறிதல்

மார்டினா மோனிகா வில்லிங் (Martina Willing) (பிறப்பு: 1959 அக்டோபர் 3) இவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக் தடகள வீரராக போட்டிகளில் போட்டியிடுகிறார். இவர் கண்பார்வையற்றவராகவும், உடலியக்கக் குறைபாடு உள்ளவராகவும் இருக்கிறார். 1994 வரை இவர் பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான எஃப் 11 வகைப்பாட்டில் போட்டியிட்டார்; பக்கவாதத்தைத் தொடர்ந்து, இவர் தள்ளு வண்டியில் அமர்ந்து வீசுபவராக போட்டிக்குத் திரும்பினார். 1994 ஆம் ஆண்டு லில்லிஹாமரில் நடந்த குளிர்கால விளையாட்டுகளிலும், 1992 ஆம் ஆண்டு முதல் 2016 வரை பார்சிலோனாவின் ரியோவில் நடைபெற்ற ஏழு கோடைக்கால விளையாட்டுகள் உட்பட இவர் எட்டு பாராலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டு பதக்கம் வென்றார். [1] லில்லிஹாம்மர் பாராலிம்பிக்கில் கீழே வீழ்ந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற முழங்கால் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட சிக்கல்கள் இவரது பக்கவாதத்திற்கு வழிவகுத்தன. [2] [3] [4]

மே 2017 நிலவரப்படி, இவர் எஃப் 11 மற்றும் எஃப் 56 ஈட்டி எறிதல், மற்றும் பி 11 பென்டத்லான் நிகழ்வுகளில் உலக சாதனை படைத்தவர்.

இவர் 2000 ஆம் ஆண்டில் வாங் யூன் டாய் சாதனை விருதை வென்றார் . இவர் உயிரியலாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.  

குறிப்புகள்

[தொகு]
  1. "Martina Willings Kunststück: 8. Paralympics, 8. Medaille" (in German). Südwest Presse. 11 Sep 2016. பார்க்கப்பட்ட நாள் 25 May 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Athlete Bio - Martina Willing". International Paralympic Committee. பார்க்கப்பட்ட நாள் 25 May 2017.
  3. "Martina Willing: First blinded, then paralyzed, now silver" (in German). RP Online. 22 Oct 2000. பார்க்கப்பட்ட நாள் 25 May 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Martina Willing brings silver in the javelin" (in German). RBB Online. 11 Sep 2016. பார்க்கப்பட்ட நாள் 25 May 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]