மாலிகா பர்பத் | |
---|---|
மாலிகா பர்பத் (மலைகளின் ராணி) | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 5,290 m (17,360 அடி)[1] |
ஆள்கூறு | 34°48′21.25″N 73°43′27.58″E / 34.8059028°N 73.7243278°E[1] |
புவியியல் | |
மூலத் தொடர் | இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 1920 |
மாலிகா பர்பத் ( Malika Parbat ; மலைகளின் ராணி ) (5,290 மீட்டர் (17,360 அடி) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வாவில் உள்ள ககன் பள்ளத்தாக்கில் உள்ள மிக உயரமான சிகரமாகும். இது சைபுல் முலுக் ஏரிக்கு தெற்கே சுமார் 6 கிலோமீட்டர் (3.7 மை) தொலைவில் அன்சூ ஏரிக்கு அருகில் உள்ளது.[2]
ககன் பள்ளத்தாக்கில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான சைபுல் முலுக் ஏரியிலிருந்து இந்த மலை தெளிவாகத் தெரியும். மாலிகா பர்பத்தை நாரன்-ஏரி சைபுல் முலுக் பக்கத்திலிருந்தும் படகுண்டி-தாதர் சிட்டா பனிப்பாறையிலிருந்தும் அணுகலாம். மாலிகா பர்பத்தை மூன்று சிகரங்கள் உருவாக்குகின்றன. சிரான் , கபனார் பள்ளத்தாக்கு மற்றும் புர்ஜி பள்ளத்தாக்கு ஆகியவற்றில் ஏறும் போது அதிக சிரமம் தரும் மற்ற சிகரங்களும் உள்ளன.
மாலிகா பர்பத்தின் (வட சிகரம்) உச்சியை இதுவரை பன்னிரண்டு மலை ஏறுபவர்கள் மட்டுமே அடைந்துள்ளனர். வடக்கு உச்சியை முதன்முதலில் 1920 இல் கேப்டன் பிடபிள்யு பாட்டி மற்றும் [3] கூர்க்கா வீரர்கள் அடைந்தனர். அதைத் தொடர்ந்து 1967 இல் திரெவர் பிரகாம், நார்மன் நோரிசு மற்றும் யீன் வைட் ஆகியோர் ஏறிச் சென்றனர்.
1998 இல், இரண்டு பாக்கித்தானியர்களான இரசித் பட் மற்றும் ஓமர் அசீசு ஆகிய இருவரும் மாலிகா பர்பத்தின் பிரதான சிகரத்தில் ஏறினர். இரசித் பட் தெற்கு சிகரத்தில் சரிவுகளில் இறங்கும் போது தனது உயிரை இழந்தார். ஆகத்து 2012 இல், அகமது முஸ்தபா அலி (பாக்கித்தானியர்) தலைமையிலான நான்கு உறுப்பினர்களின் குழு, மாலிகா பர்பத்தின் உச்சிக்குச் சென்றது. அகமது நவீத், கமல் ஐதர் மற்றும் சாகிப் அலி ஆகிய இருவரும் இந்த பயணத்தின் மற்ற உறுப்பினர்கள் . இரண்டு மலையேறுபவர்களும் 5,180 மீட்டரை (16,990 அடி) அடைந்தனர் . அதற்குள் மேகங்கள் திரண்டு ஆலங்கட்டி மழை பெய்தது. [4] மாலிகா பர்பத் 5,000 மீட்டருக்கும் அதிகமான தொழில்நுட்ப சிகரமாக கருதப்படுகிறது.
சூலை, 2012 இல், பாக்கித்தானைச் சேர்ந்த இம்ரான் யுனைடி மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த மலையேற்ற வீரர் யேன்சு சைமன்சன் ஆகியோர் 5,290 மீட்டர் (17,360 அடி) உள்ள மாலிகா பர்பத்தின் சிகரத்தை அடைந்து வரலாற்றைப் பதிவு செய்தனர். இம்ரான் யுனைடி வடக்கு சிகரத்தில் ஏறிய முதல் பாக்கித்தானியர் ஆவார். செங்குத்தான தன்மை மற்றும் பிற மலைகள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆபத்துகள் காரணமாக உள்ளூர் மக்களிடையே மலை ஏற முடியாததாக கருதப்படுகிறது. டென்மார்க் மற்றும் பாக்கித்தானுக்கு இடையே வளர்ந்து வரும் நட்பை வெளிப்படுத்துவதற்காக இரு மலை ஏறுபவர்களின் ஒரு பகுதியாக ஐந்து நாள் மலை ஏறும் பயணம் தொடங்கப்பட்டது. [5] [6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)