மாலக்பேட்டை | |
---|---|
பழைய நகரம் | |
ஆள்கூறுகள்: 17°22′N 78°30′E / 17.367°N 78.500°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத்து |
மாநகரம் | ஐதராபாத்து |
மண்டலம் | பழைய நகரம் |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | உருது, தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500036 |
வாகனப் பதிவு | டிஎஸ்-11 |
மக்களவைத் தொகுதி | ஐதராபாத்து |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | மாலக்பேட்டை |
நகரத் திட்டமிடல் முகமை | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
இணையதளம் | telangana |
மாலிக்பேட்டை அல்லது மாலக்பேட்டை (Malakpet) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள பழைய நகரப் பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இது பழைய மாலக்பேட்டை மற்றும் புதிய மாலக்பேட்டை என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் சார்மினார் மண்டலத்தின் கீழ் வருகிறது. இந்த வட்டத்தில் சைதாபாத் (24), மூசரம்பாக் (25), பழைய மாலக்பேட்டை (26), அக்பர்பாக் (27), அசம்புரா (28), சவானி (29), தபீர்புரா (30) என ஏழு வார்டுகள் உள்ளன.
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியைச் சேர்ந்த அகமது பின் அப்துல்லா பாலாலா 2018 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக மாலக்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோல்கொண்டா மன்னர் அப்துல்லா குதுப் ஷாவின் வேலைக்காரரான மாலிக் யாகூப் பெயரால் இப்பகுதிக்கு இந்தப் பெயர் வந்தது. [1]
ஐதராபாத்து நிசாம் ஆறாம் ஆசாப் ஜா தனது அரண்மனைக்கு அருகில் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் மௌலா அலி பகுதியில் செயல்பட்டுவந்த ஐதராபாத்து குதிரைப் பந்தய மைதனம் 1886 ஆம் ஆண்டில் இங்கு மாற்றப்பட்டது. [2] பின்னர், அவர் பந்தய மைதானத்தில் மக்பூப் மாளிகையையும் கட்டினார். [3]
மாலிக்பேட்டை ஐதராபாத்தின் பாரம்பரிய பகுதியாகும். இதன் வடக்கே ஆம்பர்பேட்டைமற்றும் மூசரம்பாக், கிழக்கில் தில்சுக்நகர், மேற்கில் சதர்காட் மற்றும் தெற்கில் சைதாபாத் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
பிரபலமான ஐதராபாத்து குதிரைப்பந்தய மைதானம் , [4] மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மக்பூப் மாளிகை சந்தை அல்லது மக்பூப் கஞ்ச் சந்தை ஆகியவை இங்குள்ள முக்கிய அடையாளங்களாகும். அஸ்மான் கர் அரண்மனை மற்றும் மான்சியர் ரேமண்ட் கல்லறை ஆகியவை இங்கு அமைந்துள்ள மற்ற வரலாற்று இடங்களாகும்.
வரலாற்று இடங்களைத் தவிர, மாலிக்பேட்டையில் அருகிலுள்ள மெட்ரோ இணைப்புடன் கூடிய கேலரியா வணிக வளாகம் ஒன்று உள்ளது.
பல்வேறு பனை மரங்கள் மட்டுமே உள்ள பல்மெட்டம் என்ற ஒரு சிறப்பு தாவரவியல் பூங்காவும் இங்கு அமைந்துள்ளது. இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியால் 2002 இல் நிறுவப்பட்டது.