மால் | |
---|---|
இயக்கம் | தினேஷ் குமரன் |
தயாரிப்பு | ஆர். சிவராஜ் கார்த்திக் எம்பி |
இசை | பத்மயன் சிவநாதம் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். சிவராஜ் |
கலையகம் | கோவை பிலிம் மேட்சு |
வெளியீடு | செப்டம்பர் 22, 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மால் (Maal) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தினேஷ் குமரன் இயக்கிய இப்படத்தில் அஸ்ரஃப், வி. ஜே பப்பு, கௌரி நந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் 2023 செப்டம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது.
தொடக்கத்தில் ஹர ஹர மஹாதேவகி (2017), ஜகமே தந்திரம் (2021) ஆகிய படங்களில் பணியாற்றிய கஜராஜ், சாய்கார்த்தியைத் தவிர்த்து, மால் திரைப்படம் முக்கியப் புதுமுகங்களைக் கொண்டிருந்தது. அய்யப்பனும் கோசியும் (2020) படத்தில் நடித்ததற்காக அறியப்பட்ட நடிகை கௌரி நந்தா, மார்ச் 2021 இல் படத்திற்காக எடுக்கப்பட்டார் [1] இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரிலும் தஞ்சாவூரிலும் நடைபெற்றது.[2]
செப்டம்பர் 2023 இல் ஓடிடி தளமான ஆஹா மால் திரைப்படத்தை செப்டம்பர் 22 அன்று திரையிடப்படும் என்று அறிவித்தது [3]
திரைப்படம் 2023 செப்டம்பர் 22 அன்று ஆஹா தளத்தில் வெளியிடப்பட்டது. ஒடிடிபிளேயின் ஒரு விமர்சகர், "புதுமுக இயக்குநர் தினேஷ் குமரனின் மால் ஒரு சிந்தனை காகிதத்தில் நன்றாக இருக்கிறது, ஆனால் அதை செயல்படுத்துவதில் முற்றிலும் தடுமாறுகிறது", எழுதினார். மேலும் படம் "பலவீனமான திரைக்கதை, சராசரி நடிப்பு, அமெச்சூர் திரைப்படத் தயாரிப்பால் கைவிடப்பட்டது" என்று கூறினார்.[4] தினத்தந்தியின் ஒரு விமர்சகர் படம் "சாத்தியக் குறைவு" ஆனால் சில "உயர்ந்த தருணங்கள்" என்று குறிப்பிட்டார்.[5][6]