மாவலா (Mavala) என்பது இன்றைய இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே நகரின் மேற்கே அமைந்துள்ள மலைப்பாங்கான மாவல் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களுக்கு பயன்படுத்தப்படும் பெயர்.[1] 17 ஆம் நூற்றாண்டின் மராத்திய தலைவர் சிவாஜி முதலில் தனது அதிகாரத் தளத்தை மாவலில் நிறுவினார். அது பின்னர் மராத்திய இராச்சியமாக வளர்ந்தது. அவரது கெரில்லா படைகள் மற்றும் தாக்குதல் குழுக்களில் பெரிதும் சேர்க்கப்பட்ட இந்தப் மலைப்பாங்கான வசிப்பவர்கள் குன்பி சாதிகளை உள்ளடக்கிய மாவலே என்று அழைக்கப்பட்டனர்.[2][3]
மாவலாவின் வீரர்கள் காலாட்படை மற்றும் மலைப் போரில் சிறந்து விளங்கினர். சிவாஜியின் சக்தியின் முதுகெலும்பாக காலாட்படை கருதப்பட்டது. சிவாஜியின் வாழ்க்கையை விவரிக்கும் சபாசாத் பக்கரின் கூற்றுப்படி, சிவாஜிக்கு சொந்தமான மாவலே காலாட்படையில் 100,000 ஆண்கள் இருந்தனர் எனத் தெரிகிறது.[4][5][6]
மாவலேவின் வடக்கு பிராந்தியத்தில் வசிப்பவர்களில் சிலர் கோலிகள் என அழைக்கப்பட்டனர். தெற்கில் முக்கியமாக மராத்தியர்கள் வசித்து வந்தனர்.[7][8][9]
இப்பகுதி பவன் மாவல் (52 பள்ளத்தாக்குகள் அல்லது கோராக்கள்) என்றும் அழைக்கப்பட்டது. ஒவ்வொரு கோராவும் மராத்திய நாயக்கர்கள் அல்லது தேஷ்முக்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.[10]
ஒவ்வொரு மாவல் பிரபுவும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க நோக்கத்திற்காக சொந்தமாக படைகளை நிர்வகித்து வந்தனர். கூடுதலாக, தேவைப்படும் நேரங்களில் தங்களது ஆட்சியாளர்களும் படை திரட்டி தந்தனர். இதற்காக இவர்கள் பரிசுகளையும் புதிய பிரதேசங்களின் மானியங்களையும் வெகுமதியாக பெறுவார்கள்.[11][12]
Shivaji made use of both sections of the Marathas in establishment of his swaraj...He drew his military strength mainly from the mawales, the kunbis of the Mawal region. In the north, particularly in the eighteenth century, the term 'Maratha' was used with reference to all the people of Maharashtra, irrespective of their caste distinctions.