நிகோபர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மி. இன்சுலாரிசு
|
இருசொற் பெயரீடு | |
மி. நிக்கோபாரியென்சிசு இசுடோலிசுகா, 1870 | |
வேறு பெயர்கள் | |
|
மினர்வராய நிக்கோபாரியென்சிசு (Minervarya nicobariensis), நிக்கோபார் தவளை அல்லது நிக்கோபார் மட்டைப்பந்து-தவளை என்பது இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் மட்டும் காணப்படும் தவளைச் சிற்றினமாகும். கடந்த காலத்தில் இது அண்டை தீவான அந்தமான் தீவுகளில் காணப்பட்ட பெஜெர்வர்யா அந்தமனென்சிசு சிற்றினமாகக் கருதப்பட்டது, ஆனால் தற்போது இது தனிச் சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2] இதனுடைய பரவல் நிக்கோபார் தீவுகளின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கார் நிக்கோபார் தீவில் இது ஒப்பீட்டளவில் பொதுவானதாகக் காணப்படுகிறது. இதன் விருப்பமான வாழ்விடம் புல்வெளிகளாகும். இங்கு இந்தச் சிற்றினம், மழைநீர் குட்டைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. கார் நிக்கோபாரில், இது கடலோர ஈரநிலங்களிலும், புதிதாக அழிக்கப்பட்ட வனப் பரப்புகளிலும் காணப்படுகின்றன.[3]