மின்னேரியா தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
மின்னேரியாவின் கிழக்குப்பக்கத்தில் உள்ள கிரித்தலை குளம் | |
அமைவிடம் | வடமத்திய மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | பொலன்னறுவை |
ஆள்கூறுகள் | 7°58′44″N 80°50′56″E / 7.97889°N 80.84889°E |
பரப்பளவு | 8,889.4 கெ |
நிறுவப்பட்டது | ஆகத்து 12, 1997 |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
மின்னேரியா தேசிய வனம் (Minneriya National Park) என்பது வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவாகும். இப்பகுதி தேசிய வனமாக 12 ஆகத்து 1997 அன்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இது வனவிலங்குகள் காப்பகம்என 1938 இல் அறிவிக்கப்பட்டிருந்தது.[1] இங்குள்ள மின்னேரியாக்குளத்தின் வடிநிலம், சூழலில் காணப்படும் வனவிலங்குகள் என்பவற்றை பாதுகாப்பதற்கான அப்பிரதேசம் தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது. யானைகள் வரட்சியான காலத்தில் இங்கு உணவை உட்கொள்கின்றன.[1]