மிரி மாநகராட்சி Miri City Council Majlis Bandaraya Miri | |
---|---|
வகை | |
வகை | of மிரி |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 20 மே 2005 |
முன்பு | மிரி நகராட்சி (Miri Municipal Council) |
தலைமை | |
மாநகர முதல்வர் | ஆதாம் இயி சியூ சங் (Adam Yii Siew Sang) 1 சூலை 2016 |
மாநகராட்சி துணை முதல்வர் | சுலாகி முகமட் (Julaihi Mohamad) 1 சனவரி 2022 |
மாநகராட்சி செயலாளர் | முகமட் சுனைடி மொகிடின் (Mohamad Junaidi Mohidin) 1 சனவரி 2022 |
கூடும் இடம் | |
மிரி மாநகராட்சி தலைமையகம் Jalan Raja, 98000 Miri, Sarawak, மிரி, சரவாக் | |
வலைத்தளம் | |
www |
மிரி மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Miri; ஆங்கிலம்: Miri City Council); (சுருக்கம்: MBM) என்பது மலேசியா, சரவாக், மாநிலத்தில் மிரி மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் சரவாக் மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது.
2005 மே 20-ஆம் தேதி மிரி நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்ட பிறகு இந்த மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 997 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
மாநகராட்சி முதல்வரும்; மற்றும் 28 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற சரவாக் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; மிரி மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[1]
மிரி நகராட்சி 1930-களின் முற்பகுதியில் நிறுவப்பட்டது. அதன் பிறகு 1933-ஆம் ஆண்டு, சரவாக் இராச்சியத்தின் (Kingdom of Sarawak) ஆட்சிக் காலத்தில் மிரி நகராட்சிக் கழகம் (Municipal Order M-7) நிறுவப்பட்டது.
சரவாக்கின் 4-ஆவது பிரிவின் ஆளுநராக இருந்தவர், மிரி நகராட்சிக் கழகத்தின் தலைவரானார். மற்றும் பல சமூகத் தலைவர்களும் அந்தக் கழகத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள்.
1941 முதல் 1945 வரை சரவாக்கில் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு (Japanese occupation of British Borneo); அப்போது மிரி நகராட்சிக் கழகத்தின் செயல்பாடுகள் தடைபட்டன.[2]
1956 ஜனவரி 1-ஆம் தேதி, மிரி நகராட்சிக் கழகம் (Miri Municipal Board), மிரி நகர்ப்புற மாவட்டக் கழகமாக (Miri Urban District Council) மறுசீரமைக்கப்பட்டது. 17 நியமன உறுப்பினர்களைக் கொண்டு இருந்தது.[2]
20 மே 2005-இல் மிரி நகருக்கு மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் மிரி நகராட்சிக் கழகம் என்பது மிரி மாநகராட்சி என தகுதி உயர்த்தப்பட்டது.[3]
# | முதல்வர் | தொடக்கம் | முடிவு |
---|---|---|---|
1 | வீ ஆன் வென் | 20 மே 2005 | 22 சனவரி 2010 |
2 | லாரன்சு லாய் இயூ சான் | 23 சனவரி 2010 | 30 சூன் 2016 |
3 | ஆதாம் இயி சியூ சங் | 1 சூலை 2016 | ஆதாம் இயி சியூ சங் |