தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முகம்மது இர்பான் | ||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து வீச்சு | ||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சு | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 18 2009 |
முகம்மது இர்பான் (Mohammad Irfan, உருது: محمد عرفانபிறப்பு: சூன் 6 1982) பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் வலதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் 7 அடி 1 அங்குலம் உயரம் உடையவர்.[1] முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய அதிக உயரம் உள்ளவர் எனும் பெருமை பெற்றவர் ஆவார்[2][3]. இதற்கு முன் மேற்கிந்தியத் திவுகள் அணியைச் சேர்ந்த ஜோயல் கார்னர் மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த புரூஸ் ரெய்ட் ஆகியோர் 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்டதே சாதனையாக இருந்தது.[4] இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.
2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீராரான வசீம் அக்ரம் இவரைத் தேர்வு செய்ய அறிவுறுத்தினார். எனவே இவரை கொல்கத்தா அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. இருந்த போதிலும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் [5][6][7][8] மற்றும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தது.[9]
2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . பெப்ரவரி 14 இல் கேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[10] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 12 பந்துகளில் 6 ஓட்டங்களை எடுத்து பீட்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 21 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக வீசி 86 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 3 இலகுகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனாலிலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[11]
பின் தென்னாப்பிரிக்க அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. அக்டோபர் 23, இல் துபாயில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப்போட்டியில் இவர் விளையாடினார். இதன் முதல் ஆட்டப் பகுதியில் 2 பந்துகளில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் இம்ரான் தாஹீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 35 ஓவர்கள் வீசி 102 ஓட்டங்களை வீட்டுக்கொடுத்தார்.இதில் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 29 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்து டுமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[12]
டிசம்பர் 25, 2012 இல் பெங்களூருவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமனார். இதில் 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களை விய்யுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார்.பாக்கித்தான் அணி 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாது.[13]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)