முஜிபுர் ரகுமான் Mujibur Rahman | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | கொழும்பு மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2015 | |
மேல் மாகாணசபை உறுப்பினர் | |
பதவியில் மார்ச் 2014 – ஆகத்து 2015 | |
தொகுதி | கொழும்பு மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகமது முஜிபுர் ரஹ்மான் ஏப்ரல் 17, 1968 கொழும்பு, இலங்கை |
குடியுரிமை | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சக்தி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய தேசியக் கட்சி |
வாழிடம்(s) | கொலன்னாவை வீதி, கொலன்னாவை |
முன்னாள் கல்லூரி | சாகிரா கல்லூரி, கொழும்பு |
முகமது முஜிபுர் ரகுமான் (Mohamed Mujibur Rahman, பிறப்பு: 17 ஏப்ரல் 1968) இலங்கை முசுலிம் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
முஜிபுர் இரகுமான் 1968 ஏப்ரல் 17 இல் பிறந்தார்.[1] கொழும்பு, சாகிரா கல்லூரியில் கல்வி கற்றார்.
முஜிபுர் ரகுமான் 2014 மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மேல் மாகாணசபை உறுப்பினரானார். பின்னர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[2][3][4] 2020 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[5][6]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2014 மாகாணசபை | கொழும்பு மாவட்டம் | ஐக்கிய தேசியக் கட்சி | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவு | |||
2015 நாடாளுமன்றம் | கொழும்பு மாவட்டம் | ஐக்கிய தேசியக் கட்சி | ஐக்கிய தேசிய முன்னணி | 83,884 | தெரிவு | ||
2020 நாடாளுமன்றம் | கொழும்பு மாவட்டம் | ஐக்கிய மக்கள் சக்தி | ஐக்கிய மக்கள் சக்தி | 87,589 | தெரிவு |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)