இராஜா அப்பண்ண திம்மராஜ உடையார் அல்லது முதலாம் திம்மராஜ உடையார் (1433 - 1478) மைசூரின் மன்னராக 1459 முதல் 1478 வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னராக இருந்த முதலாம் சாமராஜ உடையாரின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கு வந்தார். இவர் 1478 இல் இறந்தார்.