தி ஓல்ட் விட்ச் என்பது ஜோசப் ஜேக்கப்ஸ் தனது 1894 புத்தகமான மோர் இங்லிஷ் ஃபேரி டேல்ஸில் சேகரித்த ஒரு ஆங்கில விசித்திரக் கதையாகும் .[1] ரூத் மானிங்-சாண்டர்ஸ் எழுதிய எ புக் ஆஃப் விட்ச் மற்றும் ஆலன் கார்னரின் பிரித்தானிய ஃபேரி டேல்ஸ் புத்தகத்திலும் இது சேர்க்கப்பட்டுள்ளது.
இது ஆர்னே-தாம்சன் கதை வகை 480 - கனிவான மற்றும் இரக்கமற்ற பெண்கள் வகையைச் சேர்ந்தது. இவ்வகையைச் சேர்ந்த மற்ர கதைகள் ஃப்ராவ் ஹோலே, ஷிடா-கிரி சுஸூமே, வைரங்கள் மற்றும் தேரைகள், மதர் ஹுல்டா, ஃபாதர் ஃப்ரோஸ்ட், தி திரீ லிட்டில் மென் இன் தி வூட், தி திரீ லிட்டில் மென் இன் தி வுட், தி திரீ ஹெட்ஸ் இன் தி கிணற்று மற்றும் தி டூ கேஸ்கெட்ஸ் ஆகியவையாகும்.[2] இலக்கிய வகைகளில் தி திரீ ஃபேரிஸ் மற்றும் அரோர் மற்றும் ஐமி ஆகியவை அடங்கும்.[3]
ஒரு தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் தந்தைக்கு வேலை இல்லை. மகள்கள் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேட விரும்பினர். அதில்; ஒரு மகள் சேவை செய்யப் போவதாகக் கூறினாள். ஒரு இடம் கிடைத்தால் அவளால் முடியும் என்று அவளுடைய அம்மா சொன்னார்.
மகள் தேடினாள். ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் ரொட்டி நிறைந்த அடுப்பினைக் கண்டாள். ரொட்டி அதை வெளியே எடுக்குமாறு சிறுமியிடம் கெஞ்சியது. அவள் கீழ்ப்படிந்தாள். சிறுமி தொடர்ந்து ஒரு பசுவிடம் வந்தாள். அது தான் பாலைக் கறக்குமாறு கெஞ்சியது. ஒரு ஆப்பிள் மரம் அவளிடம் கெஞ்சி அவளைத் தன் ஆப்பிள்களை அசைக்கச் செய்தது.
அவளது தேடலைத் தொடர்ந்து, சிறுமி ஒரு முதிய சூனியக்காரியின் வீட்டிற்கு வந்தாள். வயதான சூனியக்காரி அவளை வீட்டைச் சுத்தம் செய்ய வைத்தாள். ஆனால் புகைபோக்கியைப் பார்க்க வேண்டாம் என்று அவளைத் தடை செய்தாள். ஒரு நாள், அவள் அதைச் செய்தாள். பணப் பைகள் கீழே விழுந்தன. உடனே அந்த பெண் அவைகளைத் தூக்கிகொண்டு தப்பி ஓடினாள்.
சிறுமி செய்ததை உணர்ந்த முதிய சூனியக்காரி அவளை துரத்தினாள். ஒவ்வொரு முறையும் வயதான சூனியக்காரி அவளைப் பிடிக்க நெருங்க, ஆப்பிள் மரமும் பசுவும் அவளை தடுத்தன. சிறுமி அடுப்புக்கு வந்தபோது, அது அவளை பின்னால் மறைத்து, வயதான சூனியக்காரியை ஏமாற்றி, அவளை நீண்ட நேரம் சிக்க வைத்தது. அந்தப் பெண் தனக்குக் கிடைத்த பணப் பையைப் பயன்படுத்தி ஒரு பணக்காரனை மணந்தாள்.
அவளுடைய சகோதரி அதையே முயற்சி செய்ய முடிவு செய்தாள். ஆனால் அடுப்பு, மாடு மற்றும் ஆப்பிள் மரத்திற்கு உதவ மறுத்துவிட்டாள். அவள் பணத்தைத் திருடியபோது, ஆப்பிள் மரம் அவளை மறைக்க மறுத்தது, வயதான சூனியக்காரி அவளைப் பிடித்து, அடித்து, பணப் பையைத் திரும்பப் பெற்றாள்.