முத்தியாரா டாமன்சாரா | |
---|---|
Mutiara Damansara | |
பெட்டாலிங் மாவட்டத்தில் முத்தியாரா டாமன்சாரா அமைவு; சிலாங்கூர் மாநிலத்தில் பெட்டாலிங் மாவட்டம் அமைவு | |
ஆள்கூறுகள்: 3°05′N 101°39′E / 3.083°N 101.650°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
அரசு | |
• வகை | உள்ளாட்சி |
• நிர்வாகம் | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
• மாநகர முதல்வர் | முகமட் அசான் அமீர் Mohamad Azhan Md. Amir 21 அக்டோபர் 2021 |
• துணை மாநகர முதல்வர் | அசுலிண்டா அசுமான் Azlinda Azman 24 சனவரி 2020[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.38 km2 (0.53 sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mutiara-damansara.com/ |
முத்தியாரா டாமன்சாரா (மலாய்: Mutiara Damansara; ஆங்கிலம்: Mutiara Damansara; சீனம்: 珍珠白沙羅); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும்.
இந்தப் புறநகர்ப் பகுதி பண்டார் உத்தாமா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், பண்டார் ஸ்ரீ டாமன்சாரா மற்றும் சன்வே டாமன்சாரா ஆகிய புறநகர்ப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த புறநகர்ப் பகுதியில் 484 வீட்டு மனைகளும்; 10 கடை மனைகளும் உள்ளன.[2]
முத்தியாரா டாமன்சாரா RM 1 பில்லியன் கட்டுமான மதிப்பைக் கொண்டுள்ளது.
முத்தியாரா டாமன்சாரா புறநகர்ப் பகுதியில் KG08 முத்தியாரா டாமன்சாரா அதிவிரைவு தொடருந்து நிலையம் முக்கிய தொடருந்து நிலையமாகும்.
KJ25 கிளானா ஜெயா இலகு தொடருந்து நிலையத்துடன்; ரேபிட் கே.எல் (rapidKL) பேருந்து வழித்தடம் 802; முத்தியாரா டாமன்சாராவை இணைக்கிறது.
டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலை (ஆங்கிலம்: Damansara–Puchong Expressway; மலாய்: Lebuhraya Damansara–Puchong) (LDP) , முத்தியாரா டாமன்சாராவிற்கு முக்கிய சாலையாகப் பயன்படுகிறது.
பெஞ்சாலா (Penchala Link) இணைப்பு சாலையின் மூலமாகவும் சிகாம்புட் நகரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு வசதிகள் உள்ளன.
தி கர்வ் (The Curve) எனும் இந்த நவீன வணிகத் தளம் முத்தியாரா டாமன்சாராவில் உள்ளது. தி கர்வ் என்றால் வளைவு என்று பொருள் மலேசியாவின் திறந்த வாழ்க்கை முறைமையின் முதன்மையான நவீன மையமாக இந்தக் கர்வ் (The Curve) கருதப் படுகிறது.
மலேசியாவின் விரைவான வணிக வளர்ச்சி அதன் குடிமக்களை பிரதிபலிக்கிறது என்பதற்கு இந்த நவீன வணிகத் தளம் முன்னுதாரணமாக அமைகிறது.[3]
வாடிக்கையாளர்களுக்கு நவீனமான நடைத் தடங்களைக் (Pedestrianised Shopping Mall) கொண்டுள்ளது. பிரபலமான 250 உணவு விற்பனை நிலையங்கள்; நவநாகரீக ஆடை, ஆடம்பரப் பொருள்களை விற்கும் சிறிய கடைகள் உள்ளன. இங்கு பல்வேறு பாணியிலான நவீன மயமான சிறுகடைகளும்; வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு மையங்களும் உள்ளன.[4]
ஏறக்குறைய 63,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது; 2,400 கார்களுக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு-நிலை நிலத்தடி வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் உள்ளன.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)CS1 maint: numeric names: authors list (link)