முத்து சிவலிங்கம் | |
---|---|
சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் துணை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 பெப்ரவரி 2018[1] | |
வேளாண்மை, மற்றும் கால்நடைகள் துணை அமைச்சர் | |
பதவியில் 2001–2004 | |
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் 2007–2010 | |
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் 2010–2015 | |
நாடாளுமன்ற உறுப்பினர் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 ஆகத்து 2015 | |
பதவியில் 16 ஆகத்து 1994 – 9 பெப்ரவரி 2010 | |
நாடாளுமன்ற உறுப்பினர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2010–2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரப்பானை தோட்டம், உடபுசல்லாவை, இலங்கை | 20 சூலை 1943
இறப்பு | நவம்பர் 23, 2022 நுவரெலியா, இலங்கை | (அகவை 79)
அரசியல் கட்சி | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
வாழிடம்(s) | 72 ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு |
வேலை | தொழிற்சங்கவாதி |
முத்து சிவலிங்கம் (20 சூலை 1943 – 23 நவம்பர் 2022)[2] இலங்கையின் மலையக அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.[3]
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றிய முத்து சிவலிங்கம் அக்கட்சியின் மூத்த உறுப்பினராவார். 1994 முதல் 2010 வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
முத்து சிவலிங்கம் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசு சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 45,352 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6][7]