மும்தாஜ் மேகம் | |
---|---|
মমতাজ বেগম | |
2017இல் மேகம் | |
நாடாளுமன்ற உறுப்பினர் மணிக்கஞ்ச் -2 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 சனவர் 5 | |
முன்னையவர் | எஸ். எம். அப்துல் மன்னான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 மே 1974 சின்கைர், மணிகஞ்ச் மாவட்டம், வங்காளதேசம் |
தேசியம் | வங்காளதேசம் |
அரசியல் கட்சி | அவாமி லீக் |
துணைவர்(கள்) | அப்துர் ரஷீத் சர்க்கார், ரம்ஜான் அலி, மொயின் ஹசன் சன்கால் |
வேலை | பாடகர் , அரசியல்வாதி |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | நாட்டார் பாடல் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
'Momtaz Begum மும்தாஜ் பேகம் (Momtaz Begum) (பிறப்பு : 1974 மே 5) ஒரு வங்காளதேசப் பாடகரும் மற்றும் 2014 முதல் மணிக்கஞ்ச் -2 தொகுதியைச் சேர்ந்த வங்காளதேச நாடாளுமன்றத்தின் உறுப்பினரும் ஆவார்.[1] மேலும் இவர் " தி மியூசிக் குயின் " என்று குறிப்பிடப்படுகிறார்.[2][3][4] நாற்பதாண்டுகளாக தனது வாழ்க்கையில் 700 பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மும்தாஜ் வங்காளதேசம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் வங்காளதேச புலம்பெயர் சமூகங்களுக்காக, குறிப்பாக லண்டனில், பைஷாகி மேளாவின் போது மிகவும் பிரபலமான பல நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார் [5][6]
ப்ரியா துமி சுகி ஹூ (2004) என்ற திரைப்படத்திற்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான வங்காளதேச தேசிய திரைப்பட விருதை பேகம் வென்றுள்ளார்.
பேகம் 1974 மே 5 அன்று [7] மணிகஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிங்கேரில் உள்ள ஜாய்மொண்டாப் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தனது குழந்தை பருவத்தின் பெரும்பகுதியை தனது தந்தை மோது பாயதியிடமிருந்து பாடகராக பயிற்சி பெற்றார்.[8] இவரது மற்ற ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளில் மட்டால் ரசாக் திவான் மற்றும் அப்துர் ரசீது சோர்கர் ஆகியோர் அடங்குவர்.
பேகமின் இசையின் தொடக்கம் இவரது ஆரம்ப வயதிலேயே நிகழ்ந்தது. இவர் தனது தந்தையுடன் நிகழ்ச்சிக்குச் சென்றபோது ஒரு குழந்தையாகவே இருந்தார். முதலில் பார்வையாளராகவும், விரைவில் ஒரு சக நிகழ்ச்சியாளரானப் பிறகு. மர்பதி, போய்தோகி, மற்றும் முர்சிடி போன்ற இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தினார்.[9][10]
ஆரம்பத்தில் பேகமின் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகள் முழுவதுமாக தனது சொந்த தயாரிப்பாகவே இருந்தது. இவை பிரபலமடைந்தபின், தயாரிப்பாளர்களால் மேலதிக பதிவுகளைச் செய்ய இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும் இவரது கட்டணம் வழக்கமாக மிகக் குறைவாகவே இருந்தது. மேலும் இவை நன்றாக விற்கப்படாவிட்டால் இது திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் விதிக்கப்பட்டது. இருப்பினும், இவரது இசைப் படைப்புகள் உடனடியாக விற்கப்பட்டன. மிகக் குறுகிய காலத்திற்குள், இவர் தன்னை மிகவும் பரபரப்பானவராக்கிக் கொண்டார். பெரும்பாலும் ஒரு நாளைக்கு இரண்டு பாடல்களைப் பதிவு செய்தார். வங்காளதேச நாளேடான டெய்லி ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் இவர் கூறியதாவது: "பாடல் பதிவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பே என்னிடம் பாடல் மற்றும் இசை தடங்களை ஒப்படைப்பர்கள். ஒத்திகைக்கு எந்த நேரமும் இல்லை, நான் அதை ஒரே நேரத்தில் பதிவு செய்ய வேண்டியிருந்தது" என்றார். இவரது இசைத் தொகுப்புகளில் ரிட்டர்ன் டிக்கெட், அசோல் போய்தோகி, முர்ஷைடர் தாலிம் மற்றும் ரோங்கர் பஜார் போன்றவை அடங்கும்.
பேகம் 2014இல் மாணிக்கஞ்ச் -2 தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]
பேகம் தனது சொந்த கிராமமான ஜாய்மொண்டோப்பில் உலகளவில் கண் நோய்களைக் குணப்படுத்துவதில் அதன் திட்டங்கள் கவனம் செலுத்தும் ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற அரசு சாரா அமைப்பான ஆர்பிஸ் இன்டர்நேஷனலின் ஆதரவுடன் 50 படுக்கைகள் கொண்ட மொம்தாஸ் கண் மருத்துவமனையை நிறுவினார். வறுமை காரணமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடியாததால் கண்பார்வை இழந்த இவரது தந்தை மோது போயதியின் நினைவாக இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது.