முரியல் எம். சீபெர்ட்

முரியல் எம். சீபெர்ட்
Muriel M. Seyfert
பிறப்பு(1909-02-03)பெப்ரவரி 3, 1909
தான்வர்சு, மசாசூசட்
இறப்புநவம்பர் 9, 1997(1997-11-09) (அகவை 88)
கெய்னெவில்லி, ஜார்ஜியா
Resting placeஆல் கவுண்டி நினைவுப் பூங்கா, கெய்னெவில்லி, ஜார்ஜியா
34°16′06″N 83°51′46″W / 34.26833°N 83.86278°W / 34.26833; -83.86278
துறைவானியலாளர், ஓவியக் கலைஞர்

முரியல் ஈ. முசெல்சு சீபெர்ட் (Muriel E. Mussells Seyfert) (பிறப்பு: முரியல் எலிசபெத் முசெல்சு, 3 பிப்ரவரி 1909 – 9 நவம்பர் 1997) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பால்வழியின் வலய வளிம ஒண்முகிலை (கோளாக்க வளிம ஒண்முகிலை) 1936 இல் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தில் கண்டுபிடித்து பெயர் பெற்றார்.

இளமை

[தொகு]

இவர் ஜார்ஜுக்கும் சுட்டெல்லா முசெல்சுக்கும் மகளாக 1909 பிப்ரவரி 3 இல் மசாசூசட், தான்வர்சில் பிறந்தார்.[1]

அறிவியல் பங்களிப்புகள்

[தொகு]

இவர் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தில் மாந்தக் கணிப்பாளராக வேலையில் சேர்ந்தார். இவர் பால்வழியின் வலய வளிம ஒண்முகிலைக் (கோள் வளிம ஒண்முகிலைக்) கண்டுபிடித்து பெயர்பெற்றவர் ஆவார்.[2]

சொந்த வாழ்க்கை

[தொகு]

எரிக் மெர்வின் இண்டுசே மனைவி சில்வியா முசெல்சு இலிண்டுசே முரியலின் தங்கையாவார். முரியல் கார்ல் கீனான் சீபெர்ட்டை 1935 மே 20 இல் மணந்தார்.[3] இவரது கணவரின் நினைவாகத் தான் சீபெர்ட் பால்வெளியும் சீபெர்ட் Sextet உம் பெயரிடப்பட்டன. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. McFarland, John (1 February 2004). "A modern vision: Eric Lindsay at Armagh". Oxford Journal 45 (1): 18–22. பன்னாட்டுத் தர தொடர் எண்:1468-4004. 
  2. Fuller, Wesley. "Muriel E. Mussells Seyfert (b. 1909)". SIA Collections. Smithsonian Institution Archives. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
  3. "Eric Mervyn Lindsay". Lindsay's International. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)