மூக்குத்தி அம்மன் | |
---|---|
இயக்கம் | என். ஜே. சரவணன் ஆர். ஜே. பாலாஜி |
தயாரிப்பு | ஐசரி கணேஷ் |
கதை | ஆர். ஜே. பாலாஜி |
இசை | ஜி. கிரிஷ் |
நடிப்பு | நயன்தாரா ஆர். ஜே. பாலாஜி |
ஒளிப்பதிவு | தினேஷ் கிருஷ்ணன் |
படத்தொகுப்பு | ஆர். கே. செல்வா |
கலையகம் | வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் |
விநியோகம் | டிஸ்னி + ஹாட் ஸ்டார் |
வெளியீடு | நவம்பர் 14, 2020 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman) என்பது 2020 ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதை என். ஜே. சரவணன் மற்றும் ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் இயக்கிய இந்திய தமிழ் மொழி இந்து பக்தி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி திரைக்கதையை எழுதியதோடு முன்னணி கதாபாத்திரமாகவும் நடிக்கிறார். நயன்தாரா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறார். இந்த படம் மே 2020 இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக திரையரங்கு வெளியீடு கைவிடப்பட்டு, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 14 நவம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது.
ஆர். ஜே. பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். என். ஜே. சரவணன் இத்திரைப்படத்தின் இணை இயக்குநராகப் பணிபுரிகிறார். ஆர். ஜே. பாலாஜி திரைக்கதையை எழுதியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் கீழ் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே.செல்வா படத்தொகுப்பினைச் செய்துள்ளார். ஸ்டண்ட் சில்வா அதிரடி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.[6] இத்திரைப்படத்தின் முதன்மை படப்பிடிப்பு நவம்பர் 2019 இல் தொடங்கியது,[7] இருப்பினும் நயன்தாரா டிசம்பரில் மட்டுமே படப்பிடிப்பு தளத்தில் இணைந்தார்.[2] பிப்ரவரி 2020 இல் படப்பிடிப்பு முடிவடைந்தது.[8]
"நாங்கள் பார்த்து வளர்ந்த பக்தி படங்களில் இருந்த அனைத்து கூறுகளும் இத்திரைப்படத்திலும் இருக்கும்" என்று மூக்குத்தி அம்மனைப் பற்றி பாலாஜி விவரித்தார். இது "ஒரு ஏக்கம் நிறைந்த பயணம்" என்றும் அவர் கூறினார், ஆனால், நையாண்டி செய்யாமல், குறிப்பாக தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான ஒரு பயணமாகவும் இருக்கும்.[1]
கிரிஷ் ஜி இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.[6]
மூக்குத்தி அம்மன் மே 2020 இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது,[9] ஆனால் பின்னர் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இவ்வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.[10] அக்டோபர் 23 அன்று, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாவதற்கு ஆதரவாக நாடக வெளியீடு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[11] பின்னர் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 14 நவம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது.
{{cite web}}
: |archive-date=
/ |archive-url=
timestamp mismatch (help)