மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் | |
---|---|
செயற் காலம் | 1780–தற்போது வரை |
நாடு | இந்தியா
இந்தியா |
கிளை | பிரித்தானிய இந்திய தரைப்படை
இந்தியத் தரைப்படை |
வகை | போர் பொறியாளர்கள் |
பொறுப்பு | போர் ஆதரவு |
அரண்/தலைமையகம் | பெங்களூர், கருநாடகம் |
குறிக்கோள்(கள்) | சர்வத்ரா! (எல்லா இடங்களிலும்) |
சண்டைகள் | இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் பர்மா போர்த்தொடர் இந்திய சீனப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் கார்கில் போர் |
தளபதிகள் | |
மெட்ராஸ் சாப்பர்ஸின் கர்னல் கமாண்ட் | லெப்டினன்ட் ஜெனரல் கே.சி.பஞ்சநாதன், ஏ.வி.எஸ்.எம் |
மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மெட்ராஸ் சாப்பர்ஸ் (Madras Engineer Group (MEG), informally known as the Madras Sappers) என்று அழைக்கப்படுவது, இந்தியத் தரைப்படையின் பொறியாளர் படைப்பிரிவின் பொறியாளர் குழுவாகும். மெட்ராஸ் இஞ்சினியர் குரூப்பானது பிரித்தானிய இந்தியாவின் முந்தைய மதராஸ் இராசதானி இராணுவத்திலிருந்து உருவாகி வந்தது. இந்த படைப்பிரிவின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. இந்திய இராணுவத்தில் உள்ள மூன்று பொறியாளர் படைப்பிரவுகளில் மெட்ராஸ் சாப்பர்ஸ்தான் மிகவும் பழமையானது.
1862 மற்றும் 1928 க்கு இடையில் நடந்த பல மறுசீரமைப்புகளில் மெட்ராஸ் பிரசிடென்சி இராணுவத்தில் சேதமின்றி தப்பிப்பிழைத்த ஒரே படைப்பிரிவு மெட்ராஸ் சப்பர்ஸ் மட்டுமே. [1] மெட்ராஸ் சப்பர்களின் துருப்புக்கள் தம்பிகள் என்று பிரபலமாக ஆங்கில இராணுவத்தால் அறியப்பட்டனர். இவர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள பல போர்க்களங்களில் தங்களை தனித்துவப்படுத்திக் கொண்ட தொப்பிகளுடன் தங்களை ஈடுபட்டது அவர்களின் தனிச்சிறப்பு.
இப்படை பிரிவின் முதன்மையான பணி பாலங்கள், சாலைகள் அமைப்பது, சாலைகள், சுரங்கங்களில் உள்ள தடைகளை அப்புறப்படுத்துவதி படைகள் தொடர்ந்து பயணிப்பதற்கான ஏற்பாட்டை செய்வது போன்றவை ஆகும். இந்திய விடுதலைக்கு முன்புவரை இப்படைப்பிரிவில் தமிழர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். இப்படைப்பிரிவின் பாடலானது வெற்றி, வெற்றி, எதிலும் வெற்றி தம்பி என்று தமிழில்தான் துவங்குகிறது. அது இன்றுவரை மற்றப்படாமல் உள்ளது.[2]
சுரங்கத்தை வெடித்து அழிக்கும் போர் ஆயுதமான பெங்களூர் ஏவரி, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இதன் பெங்களூரு மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. [3]
{{cite magazine}}
: Cite magazine requires |magazine=
(help)