மெரினா வரோடா | |
---|---|
Марина Врода | |
![]() 2023 இல் மெரினா வரோடா | |
தாய்மொழியில் பெயர் | Марина Врода |
பிறப்பு | மரினா அனடோலிவ்னா வரோடா 22 பெப்ரவரி 1982 கீவ், உக்ரைன் சோவியத் சோசலோசக் குடியரசு, சோவியத் ஒன்றியம் (தற்போதைய உக்ரைன்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | கீவ் தேசிய ஐ. கே. கார்பென்கோ-கேரி நாடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பல்கலைக்கழகம் |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
மரினா அனடோலிவ்னா வரோடா (Maryna Anatoliivna Vroda[a]) (பிறப்பு 22 பிப்ரவரி 1982) என்பவர் ஒரு உக்ரேனிய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார்.
இவர் 22 பிப்ரவரி 1982 அன்று உக்ரேனிய தலைநகரான கீவ்வில் பிறந்தார். மரினா கியேவ் மேல்நிலைப் பள்ளி எண் 113 இல் பயின்றார்.[1] பின்னர் கீவ் தேசிய ஐ. கே. கார்பென்கோ-கேரி நாடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[2] 2007 இல் இயக்குவதில் பட்டம் பெற்றார்.[3] இவர் வலேரி சிவக் மற்றும் மைக்கைலோ இலியென்கோ தலைமையிலான பயிலரங்குக்குச் சென்றார்.[4][5]
மரினா தன் பட்டப் படிப்பை முடித்த பிறகு உக்ரைன் திரைப்பட இயக்குநரான செர்ஜி லோஸ்னிட்சா உடன் சேர்ந்து பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா என இரண்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில், இவர் மாணவராக இருந்தபோது எடுத்த படங்கள் திரையிட்டன.[4][6] இவர் "ஃபார்கிவ்" (2003), "தி ரெயின்" (2007), "தி ஓத்" (2007), மற்றும் "ஃபேமிலி போர்ட்ரெய்ட்" (2009) உள்ளிட்ட தொடர் குறும்படங்களை உருவாக்கியுள்ளார்.[5] இவரது குறும்படமான "கிராஸ்-கன்ட்ரி" கான்சில் 2011 ஆம் ஆண்டு பாம் டி ' ஓர் விருதைப் பெற்றது. வரோடா 2010 இல் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு பாபல்ஸ்பெர்க்கின் கொன்ராட் வுல்ப் திரைப்பட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற இணைந்தார். 2023 ஆம் ஆண்டு " ஸ்டெப்னே " என்ற படத்தின் வழியாக திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.[2][7]
சுவிசர்லாந்தின் லோகார்னோ திரைப்பட விழாவில் லோகார்னோ விமர்சகர்கள்'பரிசு மற்றும் சிறந்த இயக்குநர் விருது ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட பிறகு மேரினா படத்திற்கான தனது யோசனையை குறித்து பேசினார். அவரதுக் கூற்றுப்படி, " ஸ்டெப்னே" படமானது "உக்ரைன் நாட்டை இழந்துவிட்ட உணர்வு" என்பதிலிருந்து வந்த ஒரு உணர்ச்சியின் வடிவமாகும், மேலும் அதுவே இவரை "பழைய நிலைக்குத் திரும்ப" தூண்டியது.[8] 2023 நவம்பரில், இவரது "ஸ்டெப்னே" திரைப்படம் சிறந்த ஸ்கானோரமாவில் சிறந்த அம்சத்திற்கான விருதைப் பெற்றது.[9] இத்தாலியின் 35வது திரைஸ்டே சர்வதேச திரைப்பட விழாவில், மெரினாவின் "ஸ்டெப்னே" திரைப்படம் விருது பெற்றது. இவரது முதல் திரைப்படம், வீழ்ந்து கொண்டிருக்கும் தேசத்தின் நகர்வின் சித்தரிப்பிற்காக நடுவர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.[10]
உருசியாவில் சிறையில் இருக்கும் உக்ரேனிய திரைப்படப் படைப்பாளி ஓலே சென்ட்ஸோவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்ககும் விதமாக, 2015 செப்டம்பரில் கினோஷாக் திரைப்பட விழா விருதை மரினா ஏற்க மறுத்தார்.[11] சட்டமியற்றுபவர்கள் சர்வதேச 2008 சூனில் சர்வதேச தலைவர்களுக்கு, சட்டமியற்றுபவர்களுக்கு, மனித உரிமைகள் வழக்கறிஞர்களுக்கு, கலாச்சார தலைவர்கள் போர்றோருக்கு சென்ட்சோவ் மற்றும் பிற அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நிற்குமாறு வலியுறுத்திய பகிரங்க கடிதத்தை இவர் ஆதரித்தார்.[12]
மேரினா தற்போது தனது நேரத்தை பெர்லின் மற்றும் கீவ் ஆகியவற்றுக்கு இடையில் பிரித்து செலவிடுகிறார்.[6] இவரது தாத்தா இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மன் துருப்புக்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்.[13]
உக்ரேனிய திரைப்பட நாளில், உக்ரைனிய குடியரசு தலைவர் வலோதிமிர் செலேன்சுக்கி மரினாவுக்கு உக்ரைனின் மரியாதைக்குரிய கலைஞர் என்ற பட்டத்துக்கான ஆணையில் (எண் 465/2023) கையெழுத்திட்டார். மேலும் குறிப்பிடத்தக்க திரைப்பட நிபுணர்களுக்கு அரசு பதக்கங்களை வழங்கினார் .[14]
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link)