மெலனோபிடியம் பைலினட்டம் | |
---|---|
காட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | குந்தர், 1864[1]
|
இனம்: | மெ. பைலினட்டம்
|
இருசொற் பெயரீடு | |
மெலனோபிடியம் பைலினட்டம் பெடோம், 1870[2] | |
மெலனோபிடியம் பைலினட்டம் (Melanophidium bilineatum) என்பது பொதுவாக இரு-வரிசை கருப்பு கேடய வால் பாம்பு அல்லது ஒளிரும் கேடய வால் பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவினைப் பூர்வீகமாகக் கொண்ட அகணிய உயிரி ஆகும்.[3] இந்தச் சிற்றினம் மூன்று மாதிரிகளிலிருந்து மட்டுமே அறியப்பட்டது. மேலும் காடுகளில் இது குறித்து மிகக் குறைந்த தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன.
மெ. பைலினட்டம் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கேரளா வயநாடு, கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களில் காணப்படுகிறது. வயநாட்டில் உள்ள பெரியார் சிகரத்தின் உச்சியில் சுமார் 5,000 அடி உயரத்தில் ரிச்சர்ட் என்றி பெடோம் பெற்ற மாதிரிகளிலிருந்தும், திரியோட் சிகரத்தில் (மனடோடிக்கு மேற்கே) இதேபோன்ற உயரத்திலும் இந்தச் சிற்றினம் விவரிக்கப்பட்டது.[4]
கண்ணின் விட்டம் கண் கவசத்தின் நீளத்தில் நான்கில் ஒரு பங்காகவும், வயிற்றுப்பகுதி சற்று அகலமாகவும், அருகிலுள்ள செதில்களை விட இரண்டு மடங்கு அகலமாகவும் இருக்கும். வயிற்றுப்பகுதியில் 188 முதல் 200 செதில்களும் வால்பகுதியில் 15 முதல் 17 செதில்கள் காணப்படும். வாலானது மெலனோபைடியம் பங்டேட்டத்தின் இளம் பாம்பினைப் போன்று நீளமானது. ஒளிரும் கருப்பு நிறத்தினை மேலும் கீழும் கொண்ட, மஞ்சள் செதில்களை இரண்டு வரிசையில் கொண்டு, தொடர்ச்சியான சிறிய கருப்பு புள்ளிகளைக் கொண்டோ இல்லாமலோ காணப்படும்.