மேச கல்யாணி (அல்லது கல்யாணி) கருநாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு சாந்த கல்யாணி என்று பெயர்.இந்துஸ்தானி இசையில் இவ்விராகத்திற்கு யமன் தாட் என்று பெயர்.[1][2][3]
ருத்ர என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தில் 5 வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.