மேதா ரகுநாத் | |
---|---|
பிறப்பு | 1981/1982 (age 40-41) சென்னை, இந்தியா |
தேசியம் | ![]() |
மற்ற பெயர்கள் | மேதா ரகுநாதன் |
பணி | வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2000–2010 |
மேதா ரகுநாத் ( Medha Raghunath ) இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வடிவழகியும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், சென்னையைச் சேர்ந்த சமூகவாதியுமாவார். இவர் அழகுப் போட்டிகளில் போட்டியிடுவதற்கு முன்பு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் ஒரு வடிவழகியாகவும் பணியாற்றினார். [1] [2]
மேதா சன் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியான தில்லானா தில்லானா மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பொழுதுபோக்குத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் இலங்கை தொலைக்காட்சி நிறுவனமான சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இளையகனம் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இது , மணிரத்னத்தின் அலைபாயுதே (2000) காதல் திரைப்படத்தில் நடிக்க வழிவகுத்தது. அதில் ஒரு மென்பொருள் பொறியாளராகவும், மாதவனின் தோழியாகவும் நடித்திருந்தார். [3] 2000 ஆம் ஆண்டில், மேதா மிஸ் சென்னை அழகிப் போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்றார். பூஜா நாயர் வெற்றியாளராக இருந்தார். [4]
20 வயதான மேதா, மிஸ் இந்தியா 2002 போட்டியில் பங்கேற்று முதல் 13 இடங்களில் ஒருவராக வந்தார். மேலும் பிரிட்டிசு ஆவணப்படமான பிட்ச்ஸ் & பியூட்டி குயின்ஸ்: தி மேக்கிங் ஆஃப் மிஸ் இந்தியா (2002) இல் முதன்மை நேர்காணல் செய்தவர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டார். [5] [6] தென் கொரியாவின் தேகுவில் நடைபெற்ற 2003 உலக அழகி பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக மேதா பங்கேற்றார். மிஸ் நேபாளம் மற்றும் மாலத்தீவின் பிரதிநிதிகளுக்குப் பிறகு மேதா மூன்றாவது இடத்தில் போட்டியை முடித்தார். அதே நேரத்தில் மிஸ் ஹெல்த் பட்டத்தையும் வென்றார். இவரது மேடை நிகழ்ச்சிகளுக்காக, யோகா, பரதநாட்டியத்தின் நடன வடிவம் மற்றும் தற்காப்புக் கலை வடிவமான களரி ஆகியவற்றை நிகழ்த்தினார். [7]
போட்டிகளில் தோன்றிய உடனேயே, மேதா இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அழகுக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த ஒரு நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக, தன்னைத் தாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டினார். [8] [9] [10]
2000 களின் நடுப்பகுதியில், ஆர். கே. செல்வமணியின் புலன் விசாரணை 2 திரைப்படத்தில் பிரசாந்த்திற்கு இணையாக மேதா ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இருப்பினும், தயாரிப்பு தாமதம் காரணமாக, நடிகர்கள் மாற்றம் ஏற்பட்டது. மேலும் மேதா இறுதியில் இடம்பெறவில்லை.[11] ஆனந்த விகடன் மற்றும் குமுதம் ஆகிய இரண்டு தமிழ் இதழ்களில் குறிப்பாக பிகினி படப்பிடிப்பில் இவர் அச்சு மாதிரியாகப் பணியைத் தொடர்ந்தார். [12] பின்னர் அவர் தமிழ்த் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிக்குத் திரும்பினார். குறிப்பாக 2000 களின் பிற்பகுதியில் கலைஞர் தொலைக்காட்சியில் தோன்றினார். [13] [14]
மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜின் மகனும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனுமான மருத்துவர் தீபு ராஜ்கமல் செல்வராஜைத் திருமணம் செய்த பிறகு மேதா பொழுதுபோக்கு மற்றும் அழகுக்கலைத் துறையிலிருந்து விலகினார். [15]