மேற்கு வங்காள வரலாறு என்பது பிரித்தானிய வங்காள மாகாணத்தில் இருந்து இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்குப் பகுதிகளை 1947 இல் பிரித்து இந்தியாவின் ஒரு மாநிலமாக மேற்கு வங்காளத்தை உருவாக்கியதிலிருந்து தொடங்குகிறது.
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, சமய அடிப்படையில் வங்காளம் பிரிக்கப்பட்டது. மேற்கு பகுதி இந்தியாவுடனும் ( மேற்கு வங்காளம் என்ற பெயருடன்) கிழக்கு வங்காளப் பகுதி கிழக்கு வங்காளம் என்ற பெயருடன் பாக்கித்தானுடன் இணைக்கப்பட்டது. (பின்னர் கிழக்கு பாக்கித்தான் என்று பெயர் மாற்றப்பட்டது, 1971 இல் சுதந்திர வங்களாதேசம் உருவானது).[1]
1950 ஆம் ஆண்டு, கோச் பீகார் இராச்சிய அரசர் ஜகட்டுப்பேந்திர நாராயண் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பிறகு அப்பகுதி மேற்கு வங்கத்துடன் இணைந்தது.[2] 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சந்தன்நகர் என்ற முன்னாள் பிரஞ்சு மண்டலப் பகுதி மேற்கு வங்கத்தில் 1955 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. பீகாரின் ஒரு சில பகுதிகள் மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டன.[சான்று தேவை]
ராய் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத்தில் ஒரு சிலத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. 1954 இல், காங்கிரசின் டாக்டர் பி.சி. ராய் முதல்வராக இருந்தபோது, மாநிலம் ஒரு பெரிய உணவு நெருக்கடியைச் சந்தித்தது. வங்காளத்தை ஒட்டிய பகுதிகளில் பஞ்சம் நிலவியது.[சான்று தேவை]
1967 ல் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைத்தது. இக்காலகட்டத்தில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) முக்கிய சக்தியாக ஆனது. கூட்டணியில் பங்களா காங்கிரஸ் கட்சியின் அஜோ முகர்ஜிக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டத.[சான்று தேவை]
1967 ல் மேற்கு வங்கத்தின் வடபகுதியில் உள்ள நக்சல்பாரி பகுதியில் விவசாயிகள் எழுச்சி ஏற்பட்டது. இந்தக் கிளர்ச்சியை சிபிஐ (மா)யின் மாவட்ட அளவிலான தலைவர்களான சாரு மசூம்தார் மற்றும் கானு சன்யால் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். நக்சல்பாரி இயக்கத்தை மேற்கு வங்க அரசாங்கமானது வன்முறையால் எதிர்கொண்டது. 1970 கள் மற்றும் 1980 களில் கடுமையான மின் பற்றாக்குறை, வேலைநிறுத்தங்கள் மற்றும் மார்க்சிஸ்ட்-நக்சலைட் இயக்கத்தின் வன்முறை ஆகியவை மாநிலத்தின் உள்கட்டுமானத்தை பெருமளவில் சேதப்படுத்தியதால், மாநிலத்தின் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்தது.
1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்கதேச விடுதலைப் போரினால் மேற்கு வங்காளத்துக்கு லட்சக்கணக்கான அகதிகள் வந்தடைந்தனர். இதனால் அதன் உள்கட்டமைப்பில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டன.[3] 1974 ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக தொற்றுநோயால் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். 1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசை தோற்கடித்து, இடது முன்னணி வெற்றி பெற்றது, இது மேற்கு வங்காள அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி, மூன்று தசாப்தங்களுக்கு மேலும் மாநிலத்தை ஆண்டது.[4]
1967 நவம்பரில் மேற்கு வங்க ஐக்கிய முன்னணி ஆட்சியானது மத்திய அரசால் கலைக்கப்பட்டது. பின்னர் இந்திய தேசிய காங்கிரசால் பிரபல்லா சந்திர கோஷ் தலைமையில் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்பட்டது, ஆனால் அந்த அமைச்சரவை நீண்ட காலம் நீடிக்கவில்லை. கோஷின் அமைச்சரவையின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேற்கு வங்கத்தில் சனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[சான்று தேவை]
1969 இல் மேற்கு வங்கத்தில் புதிதாக தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்க சட்டமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக சிபிஐ (மா) உருவானது.[5] இதனால் சிபிஐ மற்றும் பங்களா காங்கிரஸ் ஆகியவற்றின் முழு ஆதரவுடன், அஜோ முகர்ஜி மீண்டும் முதல்வரானார். 1970 மார்ச் 16, 19 இல் முகர்ஜி ராஜினாமா செய்தார், இதைத் தொடர்ந்து மீண்டும் மாநிலம் சனாதிபதி ஆட்சியின் கீழ் வந்தது.[சான்று தேவை]
1972 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரசின் சித்தார்த்த சங்கர் ரே முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த காலகட்டத்தில், இந்திய பிரதமர், இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்தார்.[சான்று தேவை]
இக்காலக் கட்டத்தில் காவல் துறையினர் நக்ஸலைட்டுகளுடன் சண்டையிட்டதால், பெருமளவில் வன்முறைகள் நிகழ்ந்தன .[சான்று தேவை].
1977 ஆம் ஆண்டு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி 243 இடங்களை வென்றது. இடது முன்னணியின் முதல் அரசின் முதல்வராக ஜோதி பாசு பொறுப்பேற்றார்.[சான்று தேவை]
இடது முன்னணி அரசாங்கத்தை தொடர்ச்சியாக ஐந்து முறை வழிநடத்திய பின்னர், ஜோதி பாசு மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பின்னர் புத்ததேவ் பட்டாசார்யா முதல்வரானார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த தேர்தலில், இடதுசாரி முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது, முதலமைச்சராக மீண்டும் பட்டாச்சார்யா பொறுப்பேற்றார்.[6]
1990 களின் தொடக்கத்தில் இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்தன, அதன் பின்னர், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க 2000 ஆம் ஆண்டில் புதிய சீர்திருத்தங்களை முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யா முயன்றார். 2007 ஆம் ஆண்டு வரை, மாநிலத்தின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை ஆயுதம் தாங்கிய போராளிகள் நடத்தினர்,[7][8] தொழிற்துறைக்கு நிலங்களைக் கையகப்படுத்தல் பிரச்சினையில் பல இடங்களில் அரசு நிர்வாகத்தை எதிர்ந்து மோதல்கள் நடந்தன.[9][10]
நந்திகிராம வன்முறை என்பது மேற்கு வங்காளத்தின் நந்திகிராமத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஆகும். அங்கு மேற்கு வங்க அரசானது இந்தோனேசிய தளமான சலிம் குரூப் மூலம் அமையவுள்ள சிறப்பப் பொருளாதார மண்டலத்துக்காக 10,000 ஏக்கர்கள் (40 km2) பரப்பளவிற்கான நிலத்தை அரசு கையகப்படுத்த முயன்றபோது அங்குள்ள கிராம மக்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் அங்கு இடது முன்னணி அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், 4000 க்கும் அதிகமான ஆயுதமேந்திய காவல் துறையினர் உதவியுடன் எதிர்ப்புக்களை முடக்கிவிட முயன்றனர். இதில். காவல்துறையினரால் குறைந்தபட்சம் 14 கிராமவாசிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர்.[சான்று தேவை]
மேற்கு வங்காள அரசாங்கம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறப் பகுதியான நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்து அதில் இந்தோனேசியாவின் சலிம் குழுமத்தால் .[11][12][13] ஒரு இரசாயன மையத்தை அமைக்கும் என்று முடிவு செய்தபோது SEZ சர்ச்சை தொடங்கியது. கிராமவாசிகள் இப்பகுதியின் நிர்வாகத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு கிராமங்களின் எல்லா சாலைகளையும் துண்டித்தனர்.[சான்று தேவை]
2011 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி தோற்கடிக்கப்பட்டது; திரிணாமுல் காங்கிரசு ஒரு பெரும்பான்மை இடங்களை வென்றது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான, மம்தா பானர்ஜி முதலமைச்சராக ஆனார். அதைத் தொடர்ந்து நடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல் (கிராமப்புற ஊராட்சி, நகராட்சித் தேர்தல்கள்) மற்றும் 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் (இதில் மாநிலத்தில் 42 மக்களவை தொகுதிகளில் 34 தொகுதிகளை திரிணாமூல் வென்றது) வென்றது.