மோரிசே பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. மோரிசி
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் மோரிசி டெவிட், வோகெல், வான் ரொய்ஜன், 2008 |
மோரிசே பட்டாக்கத்திப் பாம்பு (Morice's kukri snake) என்று பொதுவாக அழைக்கப்படும் ஒலிகோடான் மோரிசி (Oligodon moricei) என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு ஆகும். இந்த சிற்றினம் தெற்கு வியட்நாமில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
மோரிசே பட்டாகத்தி பாம்பின் சிற்றினப் பெயரான, மோரிசே, பிரான்சு இயற்கை ஆர்வலர் ஆல்பர்ட் மோரிசின் நினைவாக இடப்பட்டுள்ளது.[2]
மோரிசே பட்டாக்கத்திப் பாம்பு பிற பாம்புகளிலிருந்து "துரு பழுப்பு" முதுகெலும்புகளின் இரண்டு கருப்பு கோடுகள், 12 மேக்சில்லரி பற்கள், 17 முதுகுப்புறச் செதில் வரிசைகள், அதிக எண்ணிக்கையிலான வயிற்றுப்புறச் செதில்கள், ஏழு மேல் உதட்டுச் செதில்கள் மற்றும் அடர்நிற வயிறு ஆகியவற்றால் வேறுபடுகிறது.[3]