இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
மெளலானா மசூத் அசார் (Maulana Masood Azhar) பாகிஸ்தானைச் சேர்ந்த ஜிகாத் தீவிரவாதி ஆவான். ஜெய்ஸ்-இ-முகமது எனும் தடை செய்யப்பட்டத் தீவிரவாதக் குழுவை அமைத்தவன் ஆவான். இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகளுள் மிகவும் முக்கியமானவன்.[1][2]
மெளலானா மசூத் அசார் பாகிஸ்தானின் பவால்பூர் பகுதியில் 1968 ஆம் ஆண்டு 10 சகோதர சகோதரிகளுடன் பிறந்தவன்.[3] சில தகவல்களில் இவன் 11 குழதைகளுள் மூன்றாவதாக 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் தியதி பிறந்தவன் என குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இவனது தந்தை அல்லா பக்ஸ் ஷபிர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர். இவர்களுக்கு சொந்தமாகக் கோழிப் பண்ணை உண்டு. மெளலானா மசூத் அசார் பாகிஸ்தானின் கராச்சி நகரில் படித்தவன். அங்கு ஹர்கத்-உல்-அன்சார் எனும் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. சோவியத்- ஆஃப்கான் போரில் பங்கு பெற்று காயமைந்த பின் ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பு உருதுப் பத்திரிகையில் பணி செய்ய அனுப்பியது.[2][3] பின்னர் மெளலானா மசூத் அசார் ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பின் தலைவரானதும் சாம்பியா அபு துபை, சவுதி அரேபியா, அல்பேனியா, மங்கோலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து தனது குழுவுக்கு ஆட்களைச் சேர்த்தல், நிதி வசூலித்தல் மற்றும் தனது குழுவின் கொள்கைகளைப் பரப்புதல் ஆகியவற்றில் ஈடுபட்டான்.[3]
மெளலானா மசூத் அசார் தனது இயக்கத்திற்கு ஆட்களைச் சேர்பதற்காகவும், அல் காயிதா இயக்கக் குழுக்களுடன் தொடர்பு கொள்வதற்காகவும் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற செயல்களுக்காக சோமாலியா நாட்டிற்கு மூன்று முறை சென்றுள்ளான்.[4]
“ | இங்கே நான் வந்திருப்பதன் காரணம், முஸ்லீம்களாகிய நாம் அமெரிக்காவையும் இந்தியாவையும் அழிக்கும் வரை ஓயக்கூடாது என்பதைச் சொல்வதற்காகத்தான். | ” |
—மெளலானா மசூத் அசார் (10,000 பேர் திரண்டிருந்த கராச்சி பொதுக்கூட்டத்தில்)[5] |