யோங் தெக் லீ Yong Teck Lee 杨德利 | |
---|---|
![]() | |
10-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 28 மே 1996 – 28 மே 1998 | |
ஆளுநர் | சக்காரான் டன்டாய் |
முன்னையவர் | சாலே சாயிட் கெருவாக் |
பின்னவர் | பெர்னார்ட் கிலுக் தும்போக் |
1-ஆவது தலைவர் சபா முற்போக்கு கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 சனவரி 1994 | |
சபா அமைச்சரவை | |
1986–1990 | உள்ளூராட்சி மற்றும் வீடமைப்பு துணை அமைச்சர் |
1990–1994 | தொழில் வளர்ச்சி அமைச்சர் |
1994–1996 | துணை முதல்வர் |
1994–1996 | உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சர் |
மலேசிய மக்களவை | |
1999–2002 | பாரிசான் நேசனல் |
சபா மாநில சட்டமன்றம் | |
1985–1994 | ஐக்கிய சபா கட்சி |
1994–2002 | பாரிசான் நேசனல் |
2020– | பெரிக்காத்தான் நேசனல் |
2022– | சபா மக்கள் கூட்டணி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Yong Teck Lee 3 அக்டோபர் 1958 லகாட் டத்து ![]() (தற்போது சபா), மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய சபா கட்சி (PBS) (1994) சபா முற்போக்கு கட்சி (SAPP) (1994) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் நேசனல் (BN) (2008; 2020–2023) பெரிக்காத்தான் நேசனல் (PN) (2020) சபா மக்கள் கூட்டணி (GRS) (2022) |
துணைவர் | ஸ்டெல்லா கோங் இன் கியூன் |
பணி | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
யோங் தெக் லீ (ஆங்கிலம்; Yong Teck Lee; மலாய்: Datuk Seri Panglima Yong Teck Lee) (பிறப்பு: 3 அக்டோபர் 1958) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார்.
மேலும் இவர் சனவரி 1994 முதல், சபா மக்கள் கூட்டணி (GRS) மற்றும் பெரிக்காத்தான் நேசனல் (PN) ஆகியவற்றின் ஓர் அங்கமான சபா முற்போக்கு கட்சியின் (SAPP) 1-ஆவது தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார்.
அத்துடன், சபா மக்கள் கூட்டணி (GRS); மற்றும் பெரிக்காத்தான் நேசனல் (PN) ஆகிய இரு கூட்டணிகளின் துணைத் தலைவராகவும் உள்ளார்.[1]
யோங் தெக் லீ, 28 மே 1996-இல், சபாவின் முதலமைச்சரானார். சபா மாநிலத்தில் பாரிசான் நேசனல் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு ஆண்டு சபா முதலமைச்சர் பதவி சுழற்சியில் பணியாற்றினார்.[2] அவர் அதற்கு முன்பு துணை முதல்வராகப் பணியாற்றினார்.[3]
1994-இல் அவர் ஐக்கிய சபா கட்சியில் இருந்து பதவி துறப்பு செய்தார். ஐக்கிய சபா கட்சியின் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்தியைக் காரணம் காட்டி, சபா முற்போக்கு கட்சியை நிறுவினார். இருப்பினும், புதிய சபா முற்போக்கு கட்சி, ஐக்கிய சபா கட்சி (PBS) தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணியில் உறுப்பினரானது.[4]
மலேசியத் தேர்தல் குற்றச் சட்டம் 1954-இன் கீழ், யோங் தெக் லீ மீது சுமத்தப்பட்ட ஊழல் தொடர்பான குற்றத்தைத் தொடர்ந்து; அவர் செப்டம்பர் 2002 முதல், லிக்காஸ் சட்டமன்ற உறுப்பினர் பதவி; மற்றும் காயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி; ஆகிய இரு பதவிகளில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, அவர் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.
18 சூன் 2008 அன்று, அப்துல்லா அகமது படாவியின் தலைமைத்துவத்தின்ன் மீது தன் கட்சி நம்பிக்கை இழந்துவிட்டதாக யோங் தெக் லீ அறிவித்தார். மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் நடவடிக்கையையும் அவர் ஆதரித்தார்.[1]
அரசியலில் நுழைவதற்கு முன்பு, யோங் தெக் லீ, கோத்தா கினபாலுவில் வழக்கறிஞராகப் பணி புரிந்தார்.[5] இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.