ரத்த சரித்திரம் | |
---|---|
இயக்கம் | ராம் கோபால் வர்மா |
தயாரிப்பு | மது மந்தனா சின்னா வாசுதேவ ரெட்டி சீத்தல் வினோத் தல்வார் |
திரைக்கதை | பிரசாந்த் பான்டே |
கதைசொல்லி | சேத்தன் சகித்தால் ராம் கோபால் வர்மா |
இசை | தரம்-சந்தீப் |
நடிப்பு | விவேக் ஒபரோய் சுதீப் ராதிகா ஆப்தே சத்ருகன் பிரசாத் சின்கா கோட்டா சீனிவாச ராவ் அபிமன்யு சிங் சுசாந்த் சிங் |
ஒளிப்பதிவு | அமோல் ரத்தோட் |
படத்தொகுப்பு | நிபுன் அசோக் குப்தா |
விநியோகம் | விஸ்டார்ரெலிகேர் பிலிம்சு ஃபன்ட் |
வெளியீடு | அக்டோபர் 22, 2010 |
ஓட்டம் | 123 நிமிடங்கள் (இந்தி) |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு இந்தி |
ரத்தசரித்திரம் (Raththa Sarithiram) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இது இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இதே பெயரில் வெளியானது. ராம்கோபால் வர்மா இயக்கிய படத்தில் சூர்யா, விவேக் ஒபரோய், சத்ருகன் பிரசாத் சின்கா, கோட்டா சீனிவாச ராவ், பிரியாமணி, சுதீப், ராதிகா ஆப்தே உட்பட மேலும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரிதாலா ரவிந்திரன் மற்றும் மத்தலசெருவு சூரி என்பவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தைச் சித்தரிக்கும் உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தின் தொடர்ச்சியாக ரத்தசரித்திரம் 2 என்ற தலைப்பில் 2010இன் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் மூலம் விவேக் ஓபராய் தெலுங்கில் அறிமுகமானார்.[1] மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக விவேக் ஓபராய் 2011ஆம் ஆண்டின் ஸ்டார்டஸ்ட் விருதை வென்றார். படம் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது.[2][3][4] [5]