ரமணன் ராமகிருஷ்ணன் | |
---|---|
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 திசம்பர் 2023 | |
ஆட்சியாளர்கள் | அப்துல்லா (2023–2024) இப்ராகிம் இசுகந்தர் (2024 முதல்) |
பிரதமர் | அன்வர் இப்ராகீம் |
அமைச்சர் | எவோன் பெனடிக் |
முன்னையவர் | சரசுவதி கந்தசாமி |
தொகுதி | சுங்கை பூலோ |
மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவின் சிறப்புக் குழுவின் தலைவர் | |
பதவியில் 18 ஏப்ரல் 2023 – 7 பெப்ரவரி 2024 | |
பிரதமர் | அன்வர் இப்ராகிம் |
பின்னவர் | பிரபாகரன் பரமேசுவரன் |
சுங்கை பூலோ மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 நவம்பர் 2022 | |
முன்னையவர் | சிவராசா ராசையா (பா.அ–மநீக) |
பெரும்பான்மை | 2,693 (2022) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1981 கோலாலம்பூர், மலேசியா |
அரசியல் கட்சி | மலேசிய இந்திய காங்கிரசு (மஇகா) (–2014) மக்கள் நீதிக் கட்சி (மநீக) (2020 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய முன்னணி (தேமு) (–2014) பாக்காத்தான் அரப்பான் (பாஅ) (2020 முதல்) |
உறவுகள் | தேவகி கிருஷ்ணன் (பாட்டியார்) |
முன்னாள் கல்லூரி | குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | datoramanan |
டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் ([Ramanan Ramakrishnan; சீனம்: 拉马南·拉马克里希南); என்பவர் 2022 நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் சிலாங்கூர் சுங்கை பூலோ மக்களவைத் தொகுதியின் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வருகிறார். பி.கே.ஆர் கட்சியின் தலைமை தகவல் அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கிறார்.[1][2]
2023 ஏப்ரல் 18-ஆம் தேதி முதல், மலேசியப் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூகத்தின் உருமாற்ற பிரிவின் சிறப்புத் தலைவராகவும் (MITRA) டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் பொறுப்பு ஏற்றுள்ளார்.[3]
மித்ரா செயற்குழுவுக்கான புதிய நியமனங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் 2023 ஏப்ரல் 18-ஆம் தேதி அறிவித்தார். மஇகாவின் முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன், கிள்ளான் மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதிராவ் விருமன், சிகாமட் மக்களவை தொகுதி உறுப்பினர் யுனேசுவரன் ராமராஜ் மற்றும் மித்ரா தலைமை இயக்குநர் ரவிந்திரன் நாயர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மலேசிய இந்தியச் சமூகத்தில், குறிப்பாக B40 குழுவின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒரு சிறப்பு அரசாங்கப் பிரிவாக மித்ரா எனும் மலேசிய இந்திய சமூகத்தின் உருமாற்ற பிரிவு 2019-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த அமைப்பு, இந்திய சமூகப் பிரிவின் சமூக-பொருளாதார மேம்பாட்டு அமைப்பு (செடிக்) என்று அழைக்கப் பட்டது.
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ மக்களவை தொகுதியில் ரமணன் ராமகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.
மலேசியாவின் ஆளும் கட்சியாக விளங்கிய பாரிசான் கூட்டணியின் மூத்த அரசியல்வாதியான கைரி சமாலுடின்; 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ரமணன் ராமகிருஷ்ணனிடம் 2,693 வாக்குகளில் தோல்வி கண்டார். கைரி சமாலுடின், பாரிசான் கூட்டணியில் அம்னோ கட்சியின் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் ஆகும்.
மேலும், மலேசிய சுகாதார அமைச்சர்; மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்; மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகிய அமைச்சர் பதவிகளை வகித்தவர் ஆகும்.
ஆண்டு | தொகுதி | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2022 | P107 சுங்கை பூலோ, சிலாங்கூர் | ரமணன் ராமகிருஷ்ணன் (பி.கே.ஆர்) |
50,943 | 39.30% | கைரி சமாலுடின் (அம்னோ) |
48,250 | 37.22% | 130,846 | 2,693 | 82.00% | ||
முகமட் கசாலி அமின் (பாஸ்) |
29,060 | 22.42% | ||||||||||
அக்மால் யூசோப் (பெஜுவாங்) |
829 | 0.64% | ||||||||||
அகமட் சூரி பைசால் (மக்கள் கட்சி) |
279 | 0.22% | ||||||||||
சையது ரசாக் அலசுகோ (சுயேச்சை) |
165 | 0.13% | ||||||||||
நுர்சிலிண்டா பாசிரி (சுயேச்சை) |
113 | 0.09% |