ரவூப் ஹக்கீம் Rauff Hakeem | |
---|---|
நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – 03 ஜூன் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
நீதி அமைச்சர் | |
பதவியில் 22 நவம்பர் 2010 – 28 டிசம்பர் 2014 | |
முன்னையவர் | அத்தாவுட செனிவிரத்தின |
தபால், தொலைத்தொடர்பு அமைச்சர் | |
பதவியில் 2005–2010 | |
இலங்கை நாடாளுமன்றம் கண்டி மாவட்டம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 13, 1960 நாவலப்பிட்டி |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு |
துணைவர் | சானாசு அக்கீம் |
வாழிடம்(s) | 263, காலி வீதி, கொழும்பு 03 |
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி |
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | LLB, LLM |
அப்துல் ரவூப் ஹக்கீம் (Abdul Rauff Hakeem, பிறப்பு: ஏப்ரல் 13, 1960), இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முசுலிம் அரசியல்வாதியும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் 1994, 2000, 2001, 2004 தேர்தல்களிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[1] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3] [4]
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் இறந்ததை அடுத்து இவர் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்பு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து அமைச்சரானார். 2014 டிசம்பர் 28 அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசில் இருந்து விலகி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் கூட்டு எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்தது. ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.[5]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2000 நாடாளுமன்றம் | கண்டி மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | தேசிய ஐக்கியக் கூட்டணி | 28,033 | தெரிவு[6] | ||
2001 நாடாளுமன்றம் | கண்டி மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | 71,094 | தெரிவு[7] | ||
2004 நாடாளுமன்றம் | அம்பாறை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 68,627 | தெரிவு[8] | |||
2008 மாகாணசபை | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவு | |||
2010 நாடாளுமன்றம் | கண்டி மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | 54,047 | தெரிவு[9] | ||
2015 நாடாளுமன்றம்[10] | கண்டி மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | 1,02,186 | தெரிவு | ||
2020 நாடாளுமன்றம்[9] | கண்டி மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய மக்கள் சக்தி | 83,398 | தெரிவு | ||
2024 நாடாளுமன்றம் | கண்டி மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய மக்கள் சக்தி | 30,883 | தெரிவு[11] |