ரிச்சர்ட் பேட் மெக்கோஸ்கர் (Richard Bede McCosker பிறப்பு: டிசம்பர் 11, 1946) நியூ சவுத் வேல்ஸின் இன்வெரலில் பிறந்த ஒரு முன்னாள் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியத்ன் துடுப்பாட்ட வீரர் ஆவார் .இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் மற்றும் 14 ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளை ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்
மெக்கோஸ்கர் 1975 முதல் 1982 வரை 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் மற்றும் 14 ஒருநாள் போட்டிகளில் வலது கை மட்டையாளராக விளையாடினார்.
1977 ஆம் ஆண்டில் மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் நடந்த நூற்றாண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பாப் வில்லிஸின் எழும்பும் பந்தினால் இவரது தாடை உடைக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது ஆட்டப் பகுதியில் முதலுதவி செய்து பத்தாவது இடத்தில் மட்டையாடினார் ராட் மார்ஷுடன் கூட்டாக ஒன்பதாவது இழப்பிற்கு 25, மற்றும் 54 ஓட்டங்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவர் உலக தொடர் துடுப்பாட்ட அணியிலும் விளையாடினார், மேலும் 1976 ஆம் ஆண்டில் ஆண்டின் விஸ்டன் துடுப்பாட்ட வீரராகவும் இருந்தார் .
மெக்கோஸ்கர் இன்வெரலில் பிறந்தார். இவர் ஒரு வங்கியில் வேலை செய்வதற்காக தனது 21 ஆம் வயதில் இவர் சிட்னிக்கு சென்றார். இவர் 1973-74 இல் நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணிக்காக12 வது வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] இவர் தனது அறிமுக முதல் தரத் துடுப்பாட்டப் போடியில் நூறு ஓட்டங்களை எடுத்தார்.
மெக்கோஸ்கர் 1974-75 ஆம் ஆண்டில் சிறப்பாக துடுப்பாட்டம் விளையாடி 682 ஓட்டங்கள் எடுத்தார்.[2] வாலி எட்வர்ட்ஸுக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.[3] முதல் ஆட்டப் பகுதியில் 80 ஓட்டங்கள் எடுத்தார், ஆனால் அந்தப் போட்டியில் விளையாடிய போது இவர் காயமடைந்தார், இரண்டாவது ஆட்டத்தில் மட்டையாடவில்லை. .[4][5]
ஐந்தாவது போட்டியில் இவர் 35 மற்றும் 11 ஓட்டங்களை எடுத்தார்.[6] 6 வது போட்டியில் இவர் 0 மற்றும் 76 ஓட்டங்கள் எடுத்தார்.[7]
உலகக் கோப்பை மற்றும் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் தொடர்களில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்த அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
உலகக் கோப்பையில், மெக்கோஸ்கர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 73 ஓட்டங்கள் எடுத்தார்.[8][9] மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 0,[10][11] அரையிறுதியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 15 [12] இறுதிப் போட்டியில் 7 ஓட்டங்கள் எடுத்தார்.[13]
1975 ஆஷசின் முதல் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மெக்கோஸ்கர் 59,[14] 29 மற்றும் 79 [15] மற்றும் 0 மற்றும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 95 ஆகிய ஓட்டங்களை எடுத்தார்.[16] ஆடுகளம் விளையாடப் போதுமானதாக இல்லாததால் இறுதி ஒருநாள் போட்டி நடைபெறவில்லை. எனவே அந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 95* ஓட்டங்கள் எடுத்தார்.[17]
இருப்பினும் நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட நூறு ஓட்டங்களை எடுத்தார். அந்தப் போட்டியில் இவர் 127 ஓட்டங்களை எடுத்தார்.[18][19]