தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 29 நவம்பர் 2003 அரியானா, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
நிகழ்வு(கள்) | துப்பாக்கி சுடுதல் |
ரிதம் சங்வான் (பிறப்பு 29 நவம்பர் 2003) ஹரியானாவைச் சேர்ந்த இந்திய துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். இவர் வழக்கமாக 10 மீட்டர் காற்று கைத்துப்பாக்கி (ஏர் பிஸ்டல்) மற்றும் 25 மீட்டர் கைத்துப்பாக்கி (பிஸ்டல்) ஆகியவற்றில் போட்டியிடுவார்.[1] இவர் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை மற்றும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.[1][2]
மே 2023 இல் ரிதம் கைத்துப்பாக்கி சுடுதலில் 1996 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற டயானா இர்கோவாவின் 29 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 25 மீட்டர் கைத்துப்பாக்கி குழு போட்டியில் இந்திய அணியின் ஒரு பகுதியாக மனு பாக்கர் மற்றும் ஈசா சிங் ஆகியோருடன் இணைந்து தங்கம் வென்றார். சனவரி 2024 இல், ரிதம் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய தகுதிச் சுற்றில் பாரிசு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
காவல் துறையில் பணிபுரியும் ரிதமின் தந்தை நரேந்தர் குமார் மற்றும் இவரது தாயார் நீலம் ஆகியோர் இவரை துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் ஈடுபட ஊக்கப்படுத்தினர். 12 வயதில், ரிதம் முதன்முதலில் புது தில்லியில் உள்ள முனைவர். கர்ணிசிங் சுடுதல் வெளிக்குச் சென்று தனது பயிற்சியைத் தொடங்கினார்.[3] இவர் ஆரம்பத்தில் வினித் குமாரின் கீழ் பயிற்சி பெற்றார் மற்றும் இவரது தாயார் துப்பாக்கி சுடுதல் அமர்வுகளுக்கு இவருடன் வருவார். இவர் பரிதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்தார்.
2023 இல், போபால் மத்திய பிரதேச மாநில துப்பாக்கி சுடுதல் அகாடமியில் உலகக் கோப்பையில் பங்கேற்றார். மே 2023 இல் ரிதம் 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற டயானா இர்கோவாவின் 29 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.[4] பாகுவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் ரிதம் 595 ரன்கள் எடுத்தார். [5] 1994 மே மாதம் மிலன் நகரில் நடந்த உலகக் கோப்பையில் டயானா 594 புள்ளிகளை எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்த ரிதம் 10 மீட்டர் கைத்துப்பாக்கி போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். [6]
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 25 மீட்டர் கைத்துப்பாக்கி குழு போட்டியில் இந்திய அணியின் ஒரு பகுதியாக மனு பாக்கர் மற்றும் ஈசா சிங் ஆகியோருடன் இணைந்து தங்கம் வென்றார்.[7][8] சனவரி 2024 இல், சங்வான் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய தகுதிச் சுற்றில் பங்கேற்றார் மற்றும் பாரிசு ஒலிம்பிக்கிற்கான தகுதி போட்டியில் 25 மீ கைத்துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[9]