ரூத் ஹாரிசன் OBE | |
---|---|
பிறப்பு | ரூத் வின்ஸ்டென் 24 சூன் 1920 இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 13 சூன் 2000 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 79)
படித்த கல்வி நிறுவனங்கள் | பெட்ஃபோர்டு கல்லூரி, இலண்டன் |
பணி | விலங்கு நல ஆர்வலர், எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அனிமல் மெஷின்ஸ் (1964) |
வாழ்க்கைத் துணை | டெக்ஸ் ஹாரிசன் (தி. 1954) |
ரூத் ஹாரிசன் (Ruth Harrison, 24 சூன் 1920-13 சூன் 2000) பிரித்தானிய நாட்டைச் சார்ந்த விலங்குகள் நல ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார்[1].
இவருடைய தந்தையார் சுடீபன் வின்சுடன், சார்ஜ் பெர்னாட்சாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்; தாயார் கிளேர் வின்சடன் சிறந்த ஓவியர்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் குவாக்கர் இயக்கத்தில் இணைந்தார். இரண்டாம் உலகப்போருக்கு எதிர்ப்பாளராகவும், முதலுதவிப் பிரிவில் பணியாற்றிக் கொண்டும் இருந்தார்.
1964 ஆம் ஆண்டு 'அனிமல் மெசின்சு' என்ற நூலை எழுதி வெளியிட்டார்.[2] இந்நூல் விலங்குகளுக்கும், கோழிகளுக்கும் பண்ணைகளில் ஏற்படும் கொடுமைகளை விளக்கியது.[3] இந்நூல் ஏழு நாடுகளில் வெளியிடப்பட்டது.[4] இந்நூல் ஏற்படுத்திய புரட்சியின் விளைவாக 1968 ல் பிரிட்டனில் தொழிற்சாலைப் பண்ணை விலங்குகளின் நலன் சார்பான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. பிரித்தானிய அரசு இவருக்கு 'ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிசு எம்பயர்' என்ற விருதினை வழங்கியது.