ரெசின் லா | |
---|---|
ஏற்றம் | 5,500 மீ (18,045 அடி) |
அமைவிடம் | லே மாவட்டம், லடாக், இந்தியா - ருதோக் கவுண்டி, திபெத் தன்னாட்சிப் பகுதி, சீனா |
மலைத் தொடர் | இமயமலை, லடாக் மலைத்தொடர் |
ஆள்கூறுகள் | 33°25′08″N 78°50′58″E / 33.4188°N 78.8494°E |
ரெசின் லா (Rechin La ) என்பது ஒரு கணவாய் ஆகும். இது இந்தியாவின் லடாக் மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதி இடையே இமயமலையில் லடாக் மலைத்தொடரில் 5,500 மீட்டர் உயரத்தில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது. சுசூல் சமவெளி உள்ளது. சுசூல் இராணுவ முகாம் ரெசின் லாவிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
1962 இந்திய-சீனப் போரின் போது, ரெசிங் லாவிற்கு வடமேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சண்டை நடைபெற்றது. இப்பகுதியில் 2020–2021 இந்தியா–சீனா மோதல்கள் போது இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
1962 இந்திய சீனப் போரின் போது கிழக்கு லடாக்கில் ரெசின் லா கணவாயை காக்கும் படைப்பிரிவின் அதிகாரியாக இருந்தவர். மேஜர் சைத்தான் சிங். 18 நவம்பர் 1962 அன்று, சீனாவின் பெரும் படைகளை எதிர்த்துப் போராட தனது வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டே போராடினார். உடல் முழுவதும் குண்டுக் காயங்களுடன் சைதான் சிங் வீர மரணமடைந்தார். இவரது மறைவிற்குப் பின் இந்தியக் குடியரசுத் தலைவர் 18 நவம்பர் 1962 அன்று இவரது தியாகத்தைப் பாராட்டி பரம் வீர் சக்கரம் விருது வழங்கினார்.[1][2]